மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 ஜன 2018

வாட்ஸப் வடிவேலு

வாட்ஸப் வடிவேலு

வாடா மல்லிக்கு வண்ணம் உண்டு, வாசமில்லை. வாசமுள்ள மல்லிகைக்கோ, வயது குறைவு.

வீரமுள்ள கீரிக்குக் கொம்பில்லை, கொம்பு உள்ள மானுக்கோ வீரம் இல்லை.

இந்த மெசேஜை மட்டுமே கிட்டத்தட்ட 450 தடவை அனுப்பியிருப்பாங்க. எல்லா குரூப்ல இருந்தும் வருது. ஏற்கெனவே உங்கள் பார்வைக்கும் அனுப்பியிருக்கறதால உங்கள் வெறுப்பை மறுபடியும் வாங்க தயாரா இல்லை.

அவனவன் பஸ் ஓடலன்னு கவலைல இருக்கான். இவங்க இன்னமும் பாம்பு மெசேஜ் விட்டுக்கிட்டு இருக்காங்க.

‘புத்தாண்டுக்கு உலகம் முழுவதும் வாட்ஸ்அப் மூலம் பகிரப்பட்ட வாழ்த்துக்கள் 75 பில்லியன். இந்தியாவில் இருந்து மட்டும் 20 பில்லியன்’னு ஒரு செய்தி. நல்லா வருவீங்கடா... ஒண்ணும் சொல்றதுக்கில்ல.

நாளை முதல் வாட்ஸ்அப் இயங்காதுன்னு புரளி கிளப்பி விடற ஆட்கள் எல்லாம் இந்த வருஷம் இன்னும் ஆரம்பிக்கலையா?

ஒரு முன்னாள் கண்டக்டரா இருந்துட்டு எதுவும் சொல்லாம இருக்காரு ரஜினி..

டக்குனு சொல்லுங்க பல சோலி கிடக்குல்லா.

ஏன்யா ஏதாச்சும் வம்புக்குப் போவலைன்னா தூக்கமே வராதா?

ரஜினி முதல்வராகப் போறதையும், அவர் பொண்டாட்டி உள்துறை அமைச்சராகப் போறதையும், மருமகன் துணை முதல்வராகப் போறதையும் நெனச்சாக்கூட பயம் வரலைடா. மக பரதநாட்டியம் ஆடுமே... அத நெனச்சாத்தான் – அப்படின்னு ஒரு ட்விட்டை, தானே போட்ட மாதிரி 500க்கும் மேற்பட்ட ஆட்கள் போட்டுக்கிட்டு இருக்காங்க. முடியலடா டேய்...

அடுத்து இங்கே ஓர் ஆளு வாழ்க்கை தத்துவமாம்..

நம் சட்டையின் முதல் பட்டனை தவறாகப் போட்டுவிட்டால்... பின்வரும் எல்லா பட்டன்களும் தவறாகவே அமையும்!

சொன்னவர்: டெய்லர் பழனிசாமி.

எல்லா தத்துவத்தையும் ஷேக்ஸ்பியர் மட்டும்தான் சொல்லணும்னு எதிர்பார்க்காதீங்க!

வாட்ஸ்அப் என்கிறது, சொந்தக்காரங்க மாதிரி... எவ்ளோ சாதிச்சாலும் கண்டுக்க மாட்டாங்க...

ஃபேஸ்புக் என்கிறது, ஃப்ரெண்ட்ஸ் மாதிரி... சின்னதா சாதிச்சாலே தலைமேல வெச்சு கொண்டாடுவாங்க.

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

சனி 6 ஜன 2018