ஸ்டெர்லைட்டை திறக்கக் காத்திருக்கிறோம்: அனில் அகர்வால்

public

பத்துக்கும் மேற்பட்டவர்கள் நெஞ்சு, தலை, வாய், கழுத்துப் பகுதிகளில் தமிழக போலீசாரால் தூத்துக்குடியில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், இந்த போராட்டத்துக்குக் காரணமான ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளரான அனில் அகர்வால், ஆலை மீண்டும் இயங்கும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்.

இன்று மே 24 தனது ட்விட்டரில் தான் பேசி ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார் அனில் அகர்வால்.

அதில் அவர், ‘’தூத்துக்குடியில் நடந்த சம்பவங்களுக்கு எனது ஆழ்ந்த துயரத்தை சம்பந்தட்டவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இது துரதிர்ஷ்டவசமானது. ஆலை இப்போது வருடாந்திர ஷட் டவுன் என்ற வகையில் மூடப்பட்டிருக்கிறது. ஆலையைத் திறப்பதற்கான நீதிமன்றம், அரசு ஆகியவற்றின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். நீதிமன்றம் மற்றும் அரசுகளின் உத்தரவுகளையும், வழிகாட்டுதல்களையும் கண்டிப்பாகக் கடைபிடித்துவருகிறோம்.

தூத்துக்குடி நகர மக்களின் நல்வாழ்வில் நாங்கள் தொடர்ந்து அக்கறையோடு இருக்கிறோம். தூத்துக்குடி நகரத்தின் சுற்றுச் சூழலைக் காப்பதிலும், மக்கள் நலனிலும் நாங்கள் தொடர்ந்து உறுதியோடு இருக்கிறோம். தூத்துக்குடி நகர மக்களின் ஆதரவோடு தொடர்ந்து தொழிலை நடத்துவோம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *