ரிலையன்ஸ் வாடிக்கையாளர்களை அழைக்கும் வோடஃபோன்!

public

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், தனது அழைப்புச் சேவைகளை நிறுத்தவிருப்பதால் அதன் வாடிக்கையாளர்களை வோடஃபோன் நிறுவனம் தனது சேவையில் இணைந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளது.

சமீபத்தில், கடனில் சிக்கித் தவிக்கும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் டிசம்பர் 1ஆம் தேதி முதல் அழைப்புச் சேவைகளை நிறுத்தப்போவதாகவும், வாடிக்கையாளர்கள் வேறு நெட்வொர்க் இணைப்புகளுக்கு மாறிக்கொள்ளுமாறும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அறிவித்திருந்தது. அதன்படி அந்த வாடிக்கையாளர்களுக்கு போர்ட்-அவுட் வசதிகளை வழங்கி வோடஃபோன் நிறுவனம் தன்வசம் அழைக்கிறது.

இதுகுறித்து வோடஃபோன் நிறுவன தமிழக வர்த்தகத் தலைவர் எஸ்.முரளி கூறுகையில், வாடிக்கையாளர்களுக்கு எப்போதும் குறைந்த கட்டணத்தில் தரமான சேவை, சிறந்த சலுகைகளை வழங்குவதே எங்களது நோக்கமாகும். அதனால், சேவை நிறுத்தத்தைச் சந்திக்கும் வாடிக்கையாளர்களை எங்கள் பக்கம் அழைத்து எங்கள் மதிப்பை நீட்டித்துக்கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். புதிதாக வோடஃபோன் நெட்வொர்க்கில் இணையும் வாடிக்கையாளர்களுக்கு டேட்டா சலுகைகள், வாய்ஸ் கால் சலுகைகள் வழங்கவிருக்கிறோம். இந்தச் சலுகைகள் டெல்லி, மும்பை, கொல்கத்தா, குஜராத் ஆகிய நகரங்களைத் தவிர எல்லா இடங்களுக்கும் பொருந்தும்” என்று தெரிவித்துள்ளார்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *