முதலாளிகளிடமிருந்து முதலாளித்துவத்தைக் காப்பாற்ற முடியுமா?

public

“சமூகம் (Community), அரசாங்கம் (State) மற்றும் சந்தை (Market) எனும் மூன்றும் சமுதாயத்தின் மூன்று தூண்கள். இந்த மூன்று அமைப்புகளுக்கும் இடையே எப்பொழுதும் ஒரு சமநிலை நிலவ வேண்டும். ஆனால், சமூகத்தைப் பின்னுக்குத்தள்ளி, சந்தையும் அரசாங்கமும் விரிவடைந்து, வலுப்பெற்று ஆதிக்கம் செலுத்துவதால் அந்த சமநிலை இல்லாமல் போய்விட்டது. அதனால்தான் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலும் வலதுசாரி இயக்கங்கள், கட்சிகள் தலைதூக்கத் தொடங்கிவிட்டன” என்று The Third Pillar: How Markets and the State Leave the Community Behind எனும் புத்தகத்தில் வாதிடுகிறார் முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன்.

‘தாராளவாத ஜனநாயகம் (Liberal Democracy), நெறிப்படுத்தப்பட்ட முதலாளித்துவம் – இவை இரண்டும் சேர்ந்து செயல்பட்டதால்தான் இரண்டாம் உலகப்போருக்குப் பின் மேற்கத்திய நாடுகளில் 1970களின் பிற்பாதி வரை முப்பதாண்டுகளுக்கு சிறந்து செயல்படும் மக்கள்நல அரசு, வேகமான பொருளாதார வளர்ச்சி, வாழ்வில் முன்னேற சமமான வாய்ப்புகள் உருவாக்குவது சாத்தியமானது. அந்த அமைப்பு இன்று சீர்குலைந்து விட்டதால் அதிகாரம் படைத்த சிலருக்காக மட்டுமே அரசும், சந்தையும் செயல்படுகிறது; இதன் விளைவாக ஏற்படும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக மக்கள் போராடத் தொடங்கியுள்ளனர்’ என்பதே இப்புத்தகத்தின் மையக்கரு.

இன்று முதலாளித்துவம் பெரும்பான்மை மக்களின் நலனுக்காக செயல்படுவதை நிறுத்திவிட்டது; அரசின் கொள்கைகளும் அதற்கு உறுதுணையாக உள்ளன. முதலாளித்துவம் அடிக்கடி நெருக்கடிக்கு உள்ளாகும் தன்மை உடைய ஒரு பொருளாதார அமைப்பு என்பதைக் கார்ல் மார்க்ஸ் தொடங்கி, அந்த அமைப்பை ஆதரிக்கும் அறிஞர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர். தன்னைத்தானே ஒழுங்குபடுத்திக் கொள்ளும் ஆற்றல் முதலாளித்துவத்திற்கு இல்லை என்பது மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகியிருக்கிறது.

2008 இல் அமெரிக்காவில் தொடங்கி பல நாடுகளுக்கு பரவிய உலகப் பொருளாதார நெருக்கடியின் தாக்கங்களை இன்றும் உணர முடிகிறது. முதலாளித்துவத்தைக் காப்பாற்ற பல ட்ரில்லியன் டாலர் மதிப்பிலான மக்களின் வரிப்பணம் செலவு செய்யப்பட்டது. ஆனால், தான் உருவாக்கிய நெருக்கடியை விட்டு வெளியே வர அந்த அமைப்பால் முடியவில்லை. சில பெருமுதலாளிகள், பெருநிறுவனங்களின் பேராசையின் காரணத்தால் முதலாளித்துவத்தின் தன்மை கடந்த முப்பதாண்டுகளில் முற்றிலுமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த நெருக்கடி எப்படி உருவானது என்பதை ஆராய்ந்து, அதிலிருந்து முதலாளித்துவத்தை எப்படி மீட்பது என்பதற்கான வழிகளை முன்வைக்கும் முயற்சிதான் ரகுராம் ராஜனின் The Third Pillar.

முதலாளித்துவத்தை முதலாளிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளவர் ரகுராம் ராஜன். அவருடைய புத்தகத்தைப் படித்து முடிக்கும்போது அதை நடத்திக்காட்டுவதுதான் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சவால்களுள் ஒன்றாக இருக்கும் எனும் புரிதல் ஏற்படுகிறது.

.

.

**

மேலும் படிக்க

**

.

**

[ஓட்டப்பிடாரம்: வீட்டுக்கு வீடு அதிமுகவின் டெலிவரி அடையாளம்!](https://minnambalam.com/k/2019/05/16/26)

**

.

**

[இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!](https://minnambalam.com/k/2019/05/15/45)

**

.

**

[போலீசார் மிரட்டல்: பைனான்ஸ் அதிபர் தற்கொலை!](https://minnambalam.com/k/2019/05/15/75)

**

.

**

[டிஜிட்டல் திண்ணை: அள்ளிவீசும் அதிமுக, அமமுக; கிள்ளிக் கொடுக்கும் திமுக](https://minnambalam.com/k/2019/05/15/85)

**

.

**

[அஜித் 60ல் இணையும் இளம் இசையமைப்பாளர்!](https://minnambalam.com/k/2019/05/15/72)

**

.

.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *