அஜித் நடித்து வரும் நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்குப் பின், தொடங்கவிருக்கும் ‘அஜித் 60’படத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இளம் இசையமைப்பாளர் ஒருவர் பணிபுரிய உள்ளார்.
இந்த வருடத்தின் பொங்கலன்று வெளியான அஜித்தின் விஸ்வாசம் படம், அவரது கேரியரிலேயே அதிக வசூலை ஈட்டிய படமாக அமைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, அஜித் நடித்து வந்த நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து அதன் இறுதிக்கட்டதை அடைந்துள்ளது. சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களின் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரித்திருக்கும் இப்படத்தை தொடர்ந்து மீண்டும் இதே கூட்டணியில் புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார் அஜித்.
நேர்கொண்ட பார்வை இந்திப் படமான ‘பிங்க்’ ரீமேக் என்பது அனைவரும் அறிந்ததே. அஜித்தின் அடுத்த படமான ‘அஜித் 60’, வினோத் அஜித்துக்காக எழுதப்பட்ட சொந்த கதையாகும். பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படம் ஆக்ஷன் படமாக உருவாகவுள்ளது.
இந்த நிலையில், இப்படத்திற்கு இசையமைக்க ஜிப்ரான் ஒப்பந்தமாகியுள்ளார் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது. நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பில் அஜித்தை சந்தித்த ஜிப்ரானிடம் ‘இணைந்து பணியாற்றலாம்’ என அஜித் கூறியுள்ளதாக தனது வலைத்தளத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டிருந்தார் ஜிப்ரான். தற்போது வெளியான செய்தி அதனை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது. ஜிப்ரான் ஏற்கனவே வினோத்தின் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் பலர் நடித்திருக்கும் நேர்கொண்ட பார்வை ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.
..
மேலும் படிக்க
.
எடப்பாடியை அகற்ற பரோலில் வரும் சசிகலா
.
ரீபண்ட் தொகை: வருமான வரித் துறை எச்சரிக்கை!
.
ராகுல் பிரதமர்: ஏற்கத் தயாராகும் மம்தா?
.
.
இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!
.
.