மின்சாரம்: ஜப்பானை பின்னுக்குத்தள்ளும் இந்தியா!

public

இந்த ஆண்டில் ஜப்பானை பின்னுக்குத்தள்ளி ஆசியாவின் இரண்டாவது பெரிய மின்னுற்பத்தி நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று பிஎம்ஐ ரிசர்ச் ஆய்வறிக்கை கூறியுள்ளது.

இதுகுறித்து இந்த ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: ‘2018ஆம் ஆண்டில் இந்தியாவில் 363.32 கிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மின்னுற்பத்தியில் நிலக்கரி பெரும்பங்கு வகிக்கிறது. நிலக்கரி மூலமான மின்னுற்பத்தி அதிகரித்து வருவதால் ஜப்பானை பின்னுக்குத்தள்ளி ஆசியாவின் இரண்டாவது பெரிய மின்னுற்பத்தி நாடாக இந்தியா உருவாகும்.

2027ஆம் ஆண்டில் இந்திய மின்னுற்பத்தி தற்போதைய நிலையிலிருந்து 69 விழுக்காடு அதிகரிக்கும். அப்போதும் கூட மொத்த மின்னுற்பத்தியில் 75 விழுக்காடு நிலக்கரி மூலம்தான் உற்பத்தியாகும். அதேபோல இந்தியாவின் மொத்த மின்னுற்பத்தி 2020ஆம் ஆண்டில் அமெரிக்காவின் மொத்த மின்னுற்பத்தியைக் காட்டிலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது’ அண்மையில் இந்தியாவின் அனைத்துக் கிராமங்களுக்கும் 100 விழுக்காடு மின்னுற்பத்தி அளிக்கும் திட்டம் நிறைவேற்றப்பட்டது என்று ஒன்றிய அரசு தெரிவித்தது. மேலும் சவுபாக்யா திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் அளிக்கும் திட்டமும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதனால் வரும் ஆண்டுகளில் மின்சாரத் தேவை அதிகரிக்கும் என்று ஒன்றிய அரசு மதிப்பிட்டுள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *