மருத்துவர்களுக்கு இந்திய மருத்துவச் சங்கம் ஆலோசனை!

public

சமீபகாலமாக மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளித்தல்,நோயாளிகளை ஆபாசமாகப் படம் எடுத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவதால் மருத்துவர்கள் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து வருகின்றனர். அது தவிர, மருத்துவர்கள் உரிய நேரத்துக்கு மருத்துவமனைக்கு வருவதில்லை என்றும், மருத்துவர் இல்லாமல் செவிலியர்கள் மருத்துவம் பார்க்கின்றனர் எனவும் மக்கள் புகார் அளித்து வருகின்றனர். மது அருந்தும் மருத்துவர்களால் எப்படி நிலைப்பாட்டோடு நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க முடியும் என்றும் கேள்வி எழுந்துள்ளது. மேலும், போலி மருத்துவர்கள் அதிகரிப்பால் மருத்துவத்துறை அதனுடைய மதிப்பை இழந்து வருகிறது. இதன் விளைவாக மக்கள் மருத்துவமனைக்குச் செல்லவே அஞ்சுகின்றனர்.

இந்நிலையில், இந்திய மருத்துவச் சங்கம், மருத்துவர்களுக்கு ஆலோசனை குறிப்பு ஒன்று அனுப்பியுள்ளது. அதில், ‘மருத்துவர்கள் மற்றவர்களுடன் சேர்ந்து மது அருந்தக் கூடாது, ஆரோக்கியத்துக்கான விளம்பரத் தூதராக அவர்கள் திகழ வேண்டும். மருத்துவர்கள் தினமான ஜூலை 1ஆம் தேதி மற்றும் ஆசிரியர்கள் தினமான செப்டம்பர் 5ஆம் தேதி ஆகிய நாள்களில் மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். ஆண் மருத்துவர்கள் 18 மில்லியும், பெண் மருத்துவர்கள் 9 மில்லியும் மது அருந்துவதுதான் பாதுகாப்பானது. இந்திய மருத்துவச் சங்க கூட்டத்தில் மது விநியோகிக்கப்பட மாட்டாது.

ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பரிந்துரைக்கும் மருத்துவர்கள், அவர்கள் மற்றவர்களுக்குச் சொல்வதை முதலில் தங்களுடைய வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த வேண்டும். இது நோயாளிகளுக்கு முன் மருத்துவர்கள் கண்ணியத்தை காத்துக்கொள்ள வலியுறுத்துகிறது’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

“ஒரு மருத்துவர் தொழிற்துறையின் கண்ணியம் மற்றும் கௌரவத்தை நிலைநாட்ட வேண்டும். ஒரு நோயாளி தனது மருத்துவர்மீது நம்பிக்கை வைக்க வேண்டும். எந்தக் காரணத்தினாலும், தனது தொழிலுக்குக் கெட்ட பெயரை வாங்கி கொடுக்கக் கூடாது” என இந்திய மருத்துவச் சங்கத்தின் தலைவர் டாக்டர் கே.கே.அகர்வால் தெரிவித்துள்ளார்.

மேலும், மருத்துவர்கள் நோயாளிகளுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஏனெனில், சமீப ஆய்வில் 40 சதவிகித நோயாளிகள் மருத்துவர்கள் தங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். அதே சமயத்தில் மருத்துவர்கள், தங்களுடைய பழைய, தற்போதைய, எதிர்கால நோயாளிகளிடம் சமூக வலைதளங்களில் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மருத்துவத் தொழில் மிக உன்னதமானது. அதற்கு களங்கம் இல்லாமல் பார்த்துக்கொள்வது ஒவ்வொரு மருத்துவரின் கடமையாகும்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *