^பிடிபட்ட பினாமி சொத்துகள் எவ்வளவு?

public

சுமார் ரூ.4,300 கோடி மதிப்பிலான பினாமி சொத்துகள் இணைக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

ஜூன் 30ஆம் தேதி வரை ரூ.4,300 கோடி மதிப்புள்ள பினாமி சொத்துகளை வருமான வரித் துறை இணைத்துள்ளதாக நாடாளுமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 24ஆம் தேதியன்று மாநிலங்களவையில், மத்திய நிதித் துறை இணையமைச்சரான ஷிவ் பிரதாப் சுக்லா எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், “ஜூன் 30, 2018 நிலவரப்படி, ரூ.4,300 கோடி மதிப்புள்ள 1,600க்கு மேலான பினாமி பரிவர்த்தனைகள் இணைக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார். மேலும், பினாமி சொத்துகளைக் கண்டறிவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும், இந்தியா முழுவதும் 24 அர்ப்பணிக்கப்பட்ட பினாமி தடுப்பு அமைப்புகளை வருமான வரித் துறை உருவாக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஷிவ் பிரதாப் சுக்லா அளித்த மற்றொரு பதிலில், 2017-18ஆம் மதிப்பீட்டு ஆண்டில் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து ரூ.27,561 கோடி வரி வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 2016-17ஆம் ஆண்டில் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து ரூ.24,541 கோடி வரி வசூலிக்கப்பட்டுள்ளது. வருமான வரிச் சட்டத்தின் கீழ், ஒரு வெளிநாட்டு நிறுவனம் ஈட்டும் ஒட்டுமொத்த வருவாய்க்கும் வரி வசூலிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

பினாமி சொத்து பரிவர்த்தனைகள் தடுப்புச் சட்டம் 1988, பினாமி பரிவர்த்தனை (தடுப்பு) திருத்தச் சட்டம் 2016ஆகத் திருத்தம் செய்யப்பட்டு, பினாமி சொத்துக்கள் எந்த வகையில் கையகப்படுத்தப்பட்டிருந்தாலும் பினாமி பரிவர்த்தனைகளுக்கு தடை விதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *