|பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு : அவகாசம் நீட்டிப்பு!

public

தனியார் பள்ளிகளில், ஏழை மாணவர்களுக்கான 25 % இடஒதுக்கீட்டில் இன்னும் 41,823 இடங்கள் காலியாக உள்ளதால் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் அக்டோபர் 10ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டம் 2009. இந்த சட்டப்படி, 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வி அளிக்க வேண்டும். எனவே, ஆண்டுதோறும் தனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் ஏழை மாணவர்களுக்கு நுழைவு வகுப்பான எல்கேஜி, ஒன்றாம் வகுப்பில், மொத்த இடங்களில் 25% இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அந்த மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தமிழக அரசே பள்ளிகளுக்கு செலுத்தும். அதன்படி, மாநிலம் முழுவதும் தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டின் கீழ் ஒரு லட்சத்து 12 ஆயிரம் இடங்கள் இருக்கின்றன. நடப்பு கல்வி ஆண்டில் 25% இடஒதுக்கீட்டு இடங்களில் சேர ஆன்லைன் விண்ணப்ப முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, 2 கட்டங்களாக மூன்று மாதங்கள் வரை ஆன்லைன் சேர்க்கை நடத்தப்பட்டது. அதன் மூலம் சுமார் 83,000 இடங்கள் நிரப்பப்பட்டுவிட்டன. மீதமுள்ள 41,823 காலி இடங்களை நிரப்புவதற்காக 3ஆம் கட்ட மாணவர் சேர்க்கை செப்டம்பர் 11ஆம் தேதி தொடங்கியது. அதற்கான கால அவகாசம் செப்டம்பர் 25 ஆம் தேதி முடிவடைந்தது. அப்போது, 10,000 பேர் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தனர். எனவே, அக்டோபர் 10ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்படுவதாக செப்டம்பர் 28 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால், 3ஆம் கட்ட மாணவர் சேர்க்கைக்கு நேற்று (அக்டோபர் 3) வரை 11 ஆயிரம் பேர் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். எனவே, பெற்றோர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு பள்ளி கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர் ஏ.கருப்ப சாமி , “பெற்றோர்கள் தங்களுக்கு அருகில் உள்ள ஐந்து தனியார் பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து, எந்தெந்தப் பள்ளிகளில் எத்தனை இடங்கள் காலியாக இருக்கின்றன என்ற விவரத்தை ஆன்லைன் மூலம் தெரிந்துகொள்ள வேண்டும். அதேபோல், ஒவ்வொரு பள்ளியிலும் எவ்வளவு இடங்கள் நிரம்பியுள்ளன, எவ்வளவு காலி இடங்கள் உள்ளன என்ற விவரங்களை http://www.tnmatricschools.com/rte/rtepdf.aspx என்ற இணையதளப் பக்கத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும். பின்னர், பள்ளிக் கல்வித்துறையின் இணையதளமான www.dge.tn.gov.in என்னும் தளத்தில் அக்டோபர் 10 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அக்டோபர் 11 ஆம் தேதி கல்வி அதிகாரிகள் விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்வர். அக்டோபர் 12 ஆம் தேதி சேர்க்கை நடைபெறும்” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில், 2015-16 கல்வி ஆண்டில் மொத்தம் 3,673 பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு செய்யப்பட்டது. மொத்தம் 61,876 இடங்களில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் வெறும் 39,329 மாணவர்கள் மட்டுமே சேர்க்கை நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *