பட்ஜெட்: முதல்வர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்!

public

பட்ஜெட் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை கடந்த 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட நிலையில், விரைவில் தமிழகத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் ஆரம்பிக்கவுள்ளது. இந்த வருடத்திற்கான பட்ஜெட்டை துணை முதல்வர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார். இந்நிலையில் பட்ஜெட் குறித்து ஆலோசனை செய்வதற்காக இன்று (பிப்ரவரி 15) முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அனைத்துத் துறை அமைச்சர்களும் இதில் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய திட்டங்கள், மானியங்கள் மற்றும் ஒவ்வொரு துறை சார்பிலும் அறிவிக்கப்படவுள்ள திட்டங்கள், துறைகளுக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதி உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதைத் தவிர நிதிப் பற்றாக்குறை, நீட் விவகாரம், மின்வாரிய ஊழியர்கள் பிரச்சினை ஆகியவை குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில், அரசின் சாதனைகள் தொடர்பாக ஆண்டு மலர் வெளியிடுவது குறித்தும், புதிய திட்டங்கள் அறிவிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. மேலும் வரும் 24ஆம் தேதி ஜெயலலிதா பிறந்த நாள் வருவதை முன்னிட்டு அதனை எவ்வாறு கொண்டாடுவது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் ஆறாவது அமைச்சரவைக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *