தேசிய பங்குச் சந்தையிலிருந்து நிறுவனங்கள் நீக்கம்!

public

இந்தியாவின் முன்னணி பங்கு சந்தையான தேசிய பங்குச் சந்தையிலிருந்து டெக்கன் கிரானிக்கல்ஸ், கோடன்ஸ் ரீடைல் உள்ளிட்ட 19 நிறுவனங்களைப் பட்டியலில் இருந்து நீக்க செபி முடிவு செய்துள்ளது.

பங்குச் சந்தையில் பல காலமாக எந்தவித வர்த்தகமுமின்றி உள்ள பல்வேறு நிறுவனங்களின் பங்குகளை தேசிய பங்கு சந்தைப் பட்டியலில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 4,200க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பங்குகளை நீக்கப் பங்குச்சந்தை ஒழுங்கு முறை ஆணையமான செபி முடிவு செய்து அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

அதன்படி, வரும் மே மாதம் 12 தேதி முதல் தேசிய பங்குச் சந்தையிலிருந்து , கோரல் ஹப், ஈவினிக்ஸ், நுச்செம், ஸ்பேன்கோ, பாரேக் பிளாட்டினம், பசுபதி பாப்ரிக்ஸ், பேர்ல் இன்ஜினிரிங், போலர் இண்டஸ்ட்ரீஸ், விகாஷ் மெட்டால் & பவர், டக் ஷீல் சொலுஷன்ஸ், கோடன்ஸ் ரீடைல், அங்கூர் ட்ரக்ஸ் & பார்மா, ஆஷ்கோ நீயுலாப் இண்டஸ்ட்ரீஸ், தானுஸ் டெக்னாலஜிஸ், டெலிடேட்டா டெக்னாலாஜி சொலுஷன்ஸ், டெலிடேட்டா மரைன் சொலுஷன்ஸ் மற்றும் ஐ.ஓ.எல்., நெட்காம் ஆகிய நிறுவனங்களின் பங்குகளை பட்டியலில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 80 நிறுவனப் பங்குகளை கட்டாயம் வர்த்தகத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும், அந்தப் பங்குகளில் பல காலமாக வர்த்தகம் ஏதும் நடக்கவில்லை என்றும் தேசிய பங்குச் சந்தை தெரிவித்திருந்தது. மேலும், இந்நிறுவனங்களுக்கு இதுதொடர்பாக நோட்டிஸும் அனுப்பப்பட்டுள்ளது. அதைதொடர்ந்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 நிறுவனங்களைத் தனது பட்டியலில் இருந்து நீக்கியது. அதன்பிறகு கடந்த நவம்பர் மாதம் 14 நிறுவனங்களும், பிப்ரவரி மாதம் 3 நிறுவனங்களும், மார்ச் மாதம் 39 நிறுவனங்களும் தேசிய பங்குச் சந்தையில் இருந்து நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *