தமிழகம்: இந்தியாவிலேயே குறைந்த பேருந்துக் கட்டணம்!

public

இந்தியாவிலேயே குறைந்த கட்டணத்தில் பேருந்து சேவையை தமிழக அரசு வழங்கிவருகிறது என போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசுப் பேருந்தின் கட்டண உயர்வு ஜனவரி 20ஆம் தேதி முதல் அமலுக்குவந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களும், பல்வேறு அமைப்பினரும், அரசியல் கட்சியினரும், மாணவர்களும் போராட்டம் நடத்தினர்.

இதனால், பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளானார்கள். கட்டண உயர்வை வாபஸ் பெறக் கோரி எதிர்கட்சிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தன. இதையடுத்து, சாதாரண பேருந்துகளில் கட்டணம் 60 பைசாவிலிருந்து 58 பைசாவாகவும், விரைவுப் பேருந்துகளில் 80 பைசாவிலிருந்து 75 பைசாவாகவும், சொகுசுப் பேருந்துகளில் 90 பைசாவிலிருந்து 85 பைசாவாகவும், அதிநவீன பேருந்துகளில் 110 பைசாவிலிருந்து 100 பைசாவாகவும் குறைக்கப்பட்டது. இதன் மூலம் பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5லிருந்து ரூ. 4 ஆக குறைக்கப்பட்டது

இந்நிலையில், சட்டசபையில் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தி வரியில்லாத பட்ஜெட் எனக் கூறுவது எப்படி என ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு, போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளிக்கையில், திமுக ஆட்சியில் பேருந்துக் கட்டணம் 58 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. பேருந்துக் கட்டணத்தை உயர்த்தாமல் எந்த அரசும் இயங்க முடியாது. போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு, நிலுவைத் தொகை உள்ளிட்ட காரணங்களால் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்தியாவிலேயே குறைந்த கட்டணத்தில் பேருந்து சேவையை தமிழக அரசு வழங்கிவருகிறது எனத் தெரிவித்துள்ளார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *