குசேலன் விவகாரத்தின் தாக்கமும் பாலசந்தரின் ஆளுமையும்!

public

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 87

**இராமானுஜம்**

மக்களை மகிழ்விக்கும் சினிமா துறைக்குள் இருக்கும் சிக்கல்கள் பளிச்சென்று கண்ணுக்குப் புலப்படாது.

அது போன்றதுதான் குசேலன் பட விவகாரமும். தயாரிப்பு தரப்பிலிருந்து பணத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் திரையரங்குகளுக்குப் பிரித்துக் கொடுத்திருந்தால் பாலசந்தரின் திருவண்ணாமலை படம் தடுமாற்றம் இன்றி வந்திருக்கும்.

கோவை, திருச்சி விநியோகப் பகுதிக்கான நஷ்டத் தொகையைத் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொண்ட திருப்பூர் சுப்பிரமணி, ராஜமன்னார், திருச்சி ஏரியா விநியோகஸ்தர் முருகன் பிக்சர்ஸ் இரு தரப்பும் தியேட்டர்களுக்குத் தர வேண்டிய தொகையைத் தராமல் சாக்கு போக்கு சொல்லிவந்தனர்.

இவர்களை விரோதித்துக்கொண்டு தொழில் செய்வது சிரமம் என்பதால் மற்றவர்கள் மெளனம் காத்துவந்தனர்.

கவிதாலயா தரப்பில் தயாரான திருவண்ணாமலை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரே தொழில் ஒத்துழையாமை என்கிற முடிவைத் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் மறைமுகமாக அறிவிக்கிறது.

முன்னரே இப்படி ஒரு முடிவை சங்கம் அறிவித்திருந்தால் பஞ்சாயத்து பேசிக் குறைந்தபட்சத் தொகையைக் கொடுத்துப் பிரச்சினையை முடித்துவிடுவார்கள்.

எஞ்சியத் தொகைக்கு அடுத்த படம் வரும் வரை காத்திருக்க வேண்டும். அதனால்தான் சினிமாவில் பாக்கிகளை வசூலிக்க பட ரிலீஸ் தேதி நெருங்கிய பின்னரே நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அமைச்சர் பரிதி இளம்வழுதி தன்னால் இயலாது என சொன்னதைக் கூறி, பிரச்சினை எவ்வளவு சிக்கல் நிறைந்தது என்பது அமைச்சர் எ.வ வேலுவிடம் கூறப்படுகிறது.

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் அப்போதைய துணைச் செயலாளர் திருச்சி ஸ்ரீதரை அழைத்து பிரச்சினையை சுமுகமாக முடிக்க வேண்டும் எனப் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

திரையரங்குகளுக்குக் கொடுக்க வேண்டிய தொகையைக் கொடுத்துவிட்டால் போதும் எனக் கூறுகிறார் ஸ்ரீதர்.

அப்போதைய அமைச்சர் நேருவின் தம்பி மறைந்த ராமஜெயத்திடம், விநியோகஸ்தர்களிடம் பேசி தியேட்டர்களுக்குப் பணத்தைப் பெற்றுத் தருமாறு கூறுகிறார் வேலு.

அதேபோல் கோவை ஏரியாவில் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியிடம் பொறுப்பை ஒப்படைக்கிறார்.

இதெல்லாம் ஒரு பிரச்சினையா என எரிச்சல் அடையும் பொங்கலூர் பழனிச்சாமியிடம், இது கலைஞர் நேரடியாகச் சம்பந்தபட்டது எனக் கூறிய பின் புயல் வேகத்தில் பணியாற்றுகிறார். தியேட்டர்களுக்கு உரிய பணப் பட்டுவாடா நடக்கிறது

திருச்சி ஏரியாவுக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட ராமஜெயம் பிரச்சினையை முடிக்க முடியாமல் தடுமாறுகிறார். பணம் கொடுக்க வேண்டிய விநியோகஸ்தர் பின்னணியை விசாரித்த பிறகு பொறுப்பு நாகப்பட்டினம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ்.விஐயன் வசம் ஒப்படைக்கப்படுகிறது. டெல்லியில் இருந்த விஜயன் இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர திருச்சி புறப்பட்டு வருகிறார்.

மயிலாடுதுறையில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான காவேரி இல்லத்தில் திருச்சி ஸ்ரீதர், முருகன் பிக்சர்ஸ் மாப்பிள்ளை இருவரையும் வைத்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. பணத்தைக் கொடுக்க ஒரு வாரம் அவகாசம் கேட்கிறார் மாப்பிள்ளை.. மீண்டும் ஒரு முறை இப்பிரச்சினைக்காக நேரத்தை வீணடிக்கவிரும்பாத விஜயன் மாப்பிள்ளை கொடுக்க வேண்டிய பணத்திற்கு நான் பொறுப்பு என்று சொல்லி, மயிலாடுதுறை நகர திமுக செயலாளரைப் பணம் கொடுக்குமாறு சொல்கிறார் விஜயன்.

இதனைக் கேட்ட மாப்பிள்ளை அதிர்ச்சியடைந்து, அண்ணே எனக்கு ஒரு மணிநேரம் டைம் வேண்டும் என்கிறார். எதற்கு என விஐயன் கேட்க, நான் கொடுக்க வேண்டிய பணத்திற்கு நீங்கள் பொறுப்பெடுத்துக்கொண்டதற்கு நன்றி. எனக்காக யாரும் சிரமப்பட வேண்டாம் எனக் கூறி வீட்டிற்குச் சென்று பணத்தை எடுத்து வந்து தருகிறார்.

குசேலன் பட நஷ்டத்தால் ஏற்பட்ட பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர முதல்வர் தலைமையில் அன்றைய ஆளுங்கட்சி செயல்பட்டதற்குக் காரணம், பாலசந்தர் என்கிற படைப்பாளி மீது கலைஞர் கொண்ட மரியாதையும் அன்பும்தான்.

என்னை வைத்துப் படமெடுங்கள் என வாய்ப்பு கேட்டுச் சென்ற ரஜினி… திங்கள் கிழமை பகல் 1 மணிக்கு..

மின்னஞ்சல் முகவரி: entertainment@minnambalam.com

[பகுதி 1](https://www.minnambalam.com/k/2018/02/23/66) [பகுதி 2](http://minnambalam.com/k/2018/02/24/59) [பகுதி 3](https://minnambalam.com/k/2018/02/26/48) [பகுதி 4](https://minnambalam.com/k/2018/02/27/53) [பகுதி 5](https://www.minnambalam.com/k/2018/02/28/70) [பகுதி 6](https://minnambalam.com/k/2018/03/02/56) [பகுதி 7](http://minnambalam.com/k/2018/03/05/10) [பகுதி 8](https://minnambalam.com/k/2018/03/06/15) [பகுதி 9](https://minnambalam.com/k/2018/03/07/13) [பகுதி 10](https://minnambalam.com/k/2018/03/08/15) [பகுதி 11](https://www.minnambalam.com/k/2018/03/09/35) [பகுதி 12](http://minnambalam.com/k/2018/03/10/6) [பகுதி 13](http://www.minnambalam.com/k/2018/03/11/13) [பகுதி 14](http://minnambalam.com/k/2018/03/12/26) [பகுதி 15](http://www.minnambalam.com/k/2018/03/13/34) [பகுதி 16](http://www.minnambalam.com/k/2018/03/14/29) [பகுதி 17](http://minnambalam.com/k/2018/03/15/35) [பகுதி 18](http://minnambalam.com/k/2018/03/16/33) [பகுதி 19](http://minnambalam.com/k/2018/03/17/32) [பகுதி 20](http://minnambalam.com/k/2018/03/19/23) [பகுதி 21](http://minnambalam.com/k/2018/03/20/25) [பகுதி 22](http://minnambalam.com/k/2018/03/21/27) [பகுதி 23](http://www.minnambalam.com/k/2018/03/22/38) [பகுதி 24](http://minnambalam.com/k/2018/03/23/36) [பகுதி 25](http://minnambalam.com/k/2018/03/24/27) [பகுதி 26](https://minnambalam.com/k/2018/03/25/26) [பகுதி 27](http://minnambalam.com/k/2018/03/26/27) [பகுதி 28](http://www.minnambalam.com/k/2018/03/27/31) [பகுதி 29](http://minnambalam.com/k/2018/03/28/26) [பகுதி 30](http://minnambalam.com/k/2018/03/29/66) [பகுதி 31](http://minnambalam.com/k/2018/03/30/61) [பகுதி 32](http://minnambalam.com/k/2018/03/30/86) [பகுதி 33](http://minnambalam.com/k/2018/04/02/26) [பகுதி 34](http://minnambalam.com/k/2018/04/02/26) [பகுதி 35](http://minnambalam.com/k/2018/04/04/25) [பகுதி 36](http://minnambalam.com/k/2018/04/05/26) [பகுதி 37](http://minnambalam.com/k/2018/04/06/25) [பகுதி 38](http://minnambalam.com/k/2018/04/07/28) [பகுதி 39](http://minnambalam.com/k/2018/04/11/63) [பகுதி 40](http://minnambalam.com/k/2018/04/11/63) [பகுதி 41](http://minnambalam.com/k/2018/04/12/33) [பகுதி 42](http://www.minnambalam.com/k/2018/04/13/32) [பகுதி 43](http://www.minnambalam.com/k/2018/04/14/28) [பகுதி 44](https://www.minnambalam.com/k/2018/04/15/25) [பகுதி 45](http://minnambalam.com/k/2018/04/16/20) [பகுதி 46](http://minnambalam.com/k/2018/04/16/87) [பகுதி 47](http://minnambalam.com/k/2018/04/17/28) [பகுதி 48](http://minnambalam.com/k/2018/04/18/33) [பகுதி 49](http://minnambalam.com/k/2018/04/18/65) [பகுதி 50](http://minnambalam.com/k/2018/04/19/36) [பகுதி 51](http://minnambalam.com/k/2018/04/20/62) [பகுதி 52](http://minnambalam.com/k/2018/04/21/31) [பகுதி 53](http://minnambalam.com/k/2018/04/22/29) [பகுதி 54](http://minnambalam.com/k/2018/04/23/28) [பகுதி 55](http://minnambalam.com/k/2018/04/24/29) [பகுதி 56](http://minnambalam.com/k/2018/04/25/27) [பகுதி 57](http://minnambalam.com/k/2018/04/26/29) [பகுதி 58](http://minnambalam.com/k/2018/04/27/29) [பகுதி 59](https://minnambalam.com/k/2018/04/30/23) [பகுதி 60](https://minnambalam.com/k/2018/05/01/54) [பகுதி 61](http://minnambalam.com/k/2018/05/02/58) [பகுதி 62](http://minnambalam.com/k/2018/05/03/52) [பகுதி 63](http://minnambalam.com/k/2018/05/04/64) [பகுதி 64](http://minnambalam.com/k/2018/05/06/61) [பகுதி 65](http://minnambalam.com/k/2018/05/07/61) [பகுதி 66](https://minnambalam.com/k/2018/05/08/69) [பகுதி 67](https://minnambalam.com/k/2018/05/09/68) [பகுதி 68](https://www.minnambalam.com/k/2018/05/10/52) [பகுதி 69](http://minnambalam.com/k/2018/05/11/55) [பகுதி 70](http://minnambalam.com/k/2018/05/12/59) [பகுதி 71](https://minnambalam.com/k/2018/05/14/58) [பகுதி 72](http://minnambalam.com/k/2018/05/15/59) [பகுதி 73](https://www.minnambalam.com/k/2018/05/16/55) [பகுதி 74](https://minnambalam.com/k/2018/05/17/62) [பகுதி 75](http://minnambalam.com/k/2018/05/18/67) [பகுதி 76](https://minnambalam.com/k/2018/05/19/56) [பகுதி 77](https://minnambalam.com/k/2018/05/21/48) [பகுதி 78](https://www.minnambalam.com/k/2018/05/22/59) [பகுதி 79](https://minnambalam.com/k/2018/05/23/54) [பகுதி 80](https://www.minnambalam.com/k/2018/05/25/57) [பகுதி 81](https://minnambalam.com/k/2018/05/26/63) [பகுதி 82](https://minnambalam.com/k/2018/05/28/53) [பகுதி 83](https://minnambalam.com/k/2018/05/29/61) [பகுதி 84](https://minnambalam.com/k/2018/05/30/55) [பகுதி 85](https://www.minnambalam.com/k/2018/05/31/66) [பகுதி 86](https://minnambalam.com/k/2018/06/01/66)�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *