>காக்கிக்கு மாறிய சேரன்

public

இயக்குநர் சேரன் கதாநாயகனாக நடிக்கும் ராஜாவுக்கு செக் படத்தின் ட்ரெய்லர் நேற்று (ஏப்ரல் 25) வெளியாகியுள்ளது.

சேரன் இயக்கி நடித்த திருமணம் திரைப்படம் கடந்த மார்ச் மாதம் வெளியானது. அதைத் தொடர்ந்து அவர் கதாநாயகனாக நடிக்கும் ராஜாவுக்கு செக் படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இதை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டார்.

சாய் ராஜ்குமார் இயக்கியிருக்கும் படத்தில் சேரன், சிருஷ்டி டாங்கே, இர்பான் ஆகியோர் நடித்திருக்கின்றனர். கிளேயின் – லெவின் சிண்ட்ரோம் எனும் தூக்கம் சார்ந்த பிரச்சினையில் அவதியுறும் காவல் துறை அதிகாரியாக சேரன் நடித்திருக்கிறார். அவர் விசாரிக்கும் வழக்கின் குற்றவாளியே அவரது பலவீனத்தை அறிந்துகொண்டு செய்யும் டார்ச்சர்கள் என எமோஷனல் த்ரில்லர் ஜானரில் படம் உருவாகியுள்ளதை ட்ரெய்லரைப் பார்க்கும்போது உணர முடிகிறது. மிஷ்கின் இயக்கத்தில் வெளியான யுத்தம் செய் திரைப்படத்தில் சேரன் காவல் துறை அதிகாரியாக நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து இந்தப் படத்தில் மீண்டும் காக்கியில் களமிறங்கவுள்ளார்.

எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, வினோத் எஜமான்யா இசையமைத்துள்ளார். பல்லட்டே கொக்கட் பிலிம்ஸ் சார்பில் சோமன் பல்லட்டே, தாமஸ் கொக்கட் படத்தைத் தயாரித்திருக்கின்றனர்.

[ராஜாவுக்கு செக் ட்ரெய்லர்](https://www.youtube.com/watch?v=tLoXf2TFQo0)�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *