கராத்தே தியாகராஜன் என்ன பேசினார்?

public

குடிநீர் பிரச்சினைக்கான திமுகவின் ஆர்ப்பாட்டத்தை, கூட்டணி பற்றிய சர்ச்சைப் பேச்சின் களமாக மாற்றிவிட்டது திமுக மாசெவும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேருவின் பேச்சு.

ஜூன் 22 திருச்சியில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் பேசிய நேரு, “காங்கிரஸுக்குப் பல்லக்கு தூக்கியது போதும். அவர்கள் அதிக இடங்களில் போட்டியிட விருப்பப்பட்டால், திமுகவும் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும். உள்ளாட்சித் தேர்தலைத் தனியாகச் சந்தித்தால்தான் மக்களுக்குப் பயனாக இருக்கும். இது எனது கருத்து” என்று பேசி அதிர்வலைகளை ஏற்படுத்தினார். நேருவின் இந்தப் பேச்சு எதிர்வினைதானே தவிர முதல் வினை அல்ல.

இதற்கான அடிப்படை முதல் நாள் (ஜூன் 21) காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவரும், ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளருமான கராத்தே தியாகராஜன் பேசிய பேச்சுக்குத்தான் நேரு மறுநாள் பதிலளித்துள்ளார்.

சத்தியமூர்த்தி பவனில் நடந்த உள்ளாட்சித் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கராத்தே தியாகராஜன் அப்படி என்னதான் பேசினார்? பவன் வட்டாரங்களில் விசாரித்தோம்.

“எப்போதுமே கராத்தே அதிரடிப் பேச்சுக்குச் சொந்தக்காரர். வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்று இருப்பவர். அந்தக் கூட்டத்திலும் அப்படியே பேசினார். மேடையில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, செயல் தலைவர்கள் எலலாம் அமர்ந்திருக்க கராத்தே பேச ஆரம்பித்தார்.

**‘நான்கூடதான் தலைவராகணும்னு ஆசைப்பட்டேன். செயல் தலைவர் ஆகலாம்னுகூட நினைச்சேன். ஆனா, அதுவும் முடியல. நான் ஒண்ணும் தவறா எடுத்துக்க மாட்டேன். ஆனா தொண்டர்களுக்கு என்ன பதில் சொல்றது? சில பேர் மட்டும் தொடர்ந்து பதவிக்கு வந்துகிட்டே இருக்கணும். தொண்டன் தொண்டனாகவே இருக்கணுமா?**

**உள்ளாட்சித் தேர்தல் வருது. ஒரு லட்சத்து இருபதாயிரம் பதவிகள் இருக்கு. போன வாட்டி உள்ளாட்சித் தேர்தல்ல சென்னையில இருக்குற 200 வட்டத்துல முதல்ல காங்கிரஸுக்கு திமுக நான்கு வட்டம்தான் கொடுத்தாங்க. அப்புறம் தலைவர் எல்லாம் போய் பேசி 10 எக்ஸ்ட்ரா போட்டுக்கொடுத்தாங்க. இதுக்கே தொண்டர்கள்கிட்ட பதில் சொல்ல முடியலை.**

** சென்னையில 22 சட்டமன்றத் தொகுதி இருக்கு. தொகுதிக்கு ஒன்று கொடுத்தாகூட 22 வார்டு நமக்கு வரணும். அப்படி இல்லையா காங்கிரஸ் தனியா நின்னா கூட 35 வார்டுல ஜெயிக்குற அளவுக்கு இருக்கோம். கட்சியெல்லாம் கடந்து நமக்கு இருக்கிற லோக்கல் அட்ஜெஸ்மெண்ட் மூலமாகவே ஜெயிக்கலாம். அதனால வர்ற உள்ளாட்சித் தேர்தலில் தொண்டர்களுக்குப் பதவி வாங்கற வழியப் பாருங்க’ என்று பேசினார் கராத்தே.**

**அவருக்குப் பல மாவட்டத் தலைவர் ஆதரவு தெரிவித்தார்கள். மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசும்போது, ‘கராத்தே தியாகராஜன் பேச்சைக் கவனித்தேன். லோக்கல் செல்வாக்கு மூலமாகவே காங்கிரஸ்காரர்கள் வெற்றி பெற முடியுங்கிற கருத்து நல்ல கருத்து. அதை நான் கவனத்தில் கொள்கிறேன்’ என ஆச்சரியப்பட வைத்தார்” என்றனர் சத்தியமூர்த்தி பவன் வட்டாரத்தில்.**

**இந்தத் தகவல்கள் அறிந்த பிறகே ஆர்ப்பாட்டத்தில் காங்கிரசுக்கு எதிராகக் கம்பு சுழற்றியுள்ளார் நேரு.**

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: சோனியா கோரிக்கை… ஸ்டாலின் நிராகரிப்பு!](https://minnambalam.com/k/2019/06/22/70)**

**[அந்த ஜாம்பவான் போகட்டும்: தங்கத்தை சாடும் தினகரன்](https://minnambalam.com/k/2019/06/22/64)**

**[பாஜகவைத் தொடர்ந்து எதிர்ப்பேன்: தினகரன்](https://minnambalam.com/k/2019/06/22/23)**

**[காலேஸ்வரம் திட்டம்: ஆட்டத்தை மாற்றும் அற்புதம்!](https://minnambalam.com/k/2019/06/22/4)**

**[ஜூலை 1 : சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்!](https://minnambalam.com/k/2019/06/21/69)**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *