இம்முறையாவது வெற்றியைத் தாக்குமா ‘வில்லு’ கூட்டணி?

public

விஜய் 63இல் நயன்தாரா நடிக்க வாய்ப்புள்ளது எனக் கூறப்பட்டுவந்த நிலையில் அவர்தான் நடிக்கிறார் எனத் தற்போது அதிகாரபூர்வமாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.

கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை விஜய்க்கு அளித்த படம் மெர்சல். தற்போது சர்காரின் வசூல் மெர்சல் வசூலையே முந்திவிட்டது எனக் கூறப்பட்டாலும் சர்காரின் இந்த முந்துதலுக்கு மெர்சல் வெற்றியின் உந்துதலும் ஒரு காரணம். விஜய்யின் திரைப்பயணத்தில் ரூ.200 கோடி வசூலைத் தொட்ட முதல் படமும் மெர்சல்தான் எனவும்கூட கூறப்பட்டது. இப்படியான ஹைலைட்டுகளாலோ என்னவோ மீண்டும் அட்லியின் படத்திலேயே நடிப்பது என முடிவெடுத்துள்ளார் விஜய். இசைக்கு ஏ.ஆர்.ரஹ்மான், பாடல்களுக்கு விவேக் எனவும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஆனால், கதாநாயகி குறித்து அறிவிக்கப்படாமலேயே இருந்துவந்தது. இந்த நிலையில் நேற்று அதையும் அறிவித்துவிட்டனர். அந்த வகையில் நடிகை நயன்தாரா இதில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். அட்லியின் முதல் படமான ராஜா ராணியின் வெற்றியில் துருப்புச்சீட்டாக இருந்தவர் நயன்தாரா. நடிப்பில் புதிய பரிமாணத்தைக் காட்டும் சூழலையும் அந்தப் படம் அவருக்கு வழங்கியிருந்தது. இந்த நிலையில்தான் அட்லியின் நான்காவது படத்திலும் இணைந்துள்ளார் நயன்தாரா.

அட்லி, நயன்தாரா காம்போ இப்படி இருக்க விஜய், நயன்தாரா காம்போ பக்கம் சென்றால் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2009இல் வில்லு படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். அதன் பிறகு இப்போதுதான் மீண்டும் இணைகின்றனர். பிரபுதேவா இயக்கியிருந்த அந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

ராஜா ராணியில் நஸ்ரியா மற்றும் நயன்தாரா, தெறியில் சமந்தா மற்றும் எமி ஜாக்சன், மெர்சலில் சமந்தா, காஜல் அகர்வால் மற்றும் நித்யா மேனன் என அட்லியின் இதுவரையிலான படங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட கதாநாயகிகளே இதுவரை நடித்துள்ளனர். எனவே இந்தப் படத்திலும் இன்னும் சில கதாநாயகிகள் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *