|அமுக்க வந்த மாற்றான் பிரதர்ஸ் : அப்டேட் குமாரு

public

அன்னைக்குத் தான் ஏதோ ரிமோட்ல ஓப்பன் பண்ணாங்க, ஆளுக்கொன்னு கைல புடிச்சிட்டு நின்னாங்கன்னு பாத்தா… ‘நமது அம்மா’ பத்திரிகை திறந்து வைக்க கீபோர்டைக் கைல குடுத்தாலும் ரெண்டு பேரும் ஒரே பட்டனைத் தான் அமுக்குறாங்க. கீபோர்டுல தான் ரெண்டு ‘ENTER’ பட்டன் இருக்குமே. ஆளுக்கொன்னுத்த அமுக்கிருக்கலாமே ஆபீசர்னா முதல்வரும், துணை முதல்வரும் ஈருயிர் ஓருடல் மாதிரிங்குறாய்ங்க. மாற்றான் படத்துல ரெண்டு சூர்யாவை பிரிச்சுவிட்ட மாதிரி, ரெண்டு பேரையும் பிடுச்சி தச்சி உட்டுட்டோம்னா இந்தப் பிரச்னையெல்லாம் வராதுன்னு ஐடியா சொல்லிட்டு வந்துட்றேன். அப்டேட்டைப் படிங்க.

**@amuduarattai**

கமலின் கட்சி மார்ச் 8- ம் தேதி சென்னையில் மகளிர் தின பொதுகூட்டம் நடத்துகிறது.

கமல், கூட்டத்திற்கு அவ்வை சண்முகி” வேடத்தில் வருவாரோ??!

**@வாசுகி பாஸ்கர்**

அரசியலமைப்பு சட்டத்தை எரிக்கப் போவதாக தந்தை பெரியார் சொன்னது 16 .11 .1957 , எரித்தது அதே மாதம் 26 ஆம் தேதி.

அண்ணல் அம்பேத்கர் இறந்தது 1956 . அதாவது அரசியலமைப்பு சட்டம் எரிக்கப்படுவதற்கு ஒரு வருடம் முன்பே இறந்து விட்டார்.

நேற்று நியூஸ் செவன் தொலைக்காட்சியில் பேசிய ஒரு நாம் தமிழர் தம்பி,

“நான் எழுதிய அரசியலமைப்பு சட்டத்தை ஏன் எரித்தீர்கள்?” என்று அம்பேத்கர் பெரியாரிடம் கேட்டாராம்.

அண்ணனை மாதிரியே வாயிக்கு வந்ததை எல்லாம் அடிச்சி விடுறது.

**amuduarattai**

யாருடைய கூட்டணிக்காகவும் பாஜக ஏங்கவில்லை.# பொன்.ராதாகிருஷ்ணன்.

ஓட்டிங் மெஷின் கூட பலமான கூட்டணி அமைந்த தைரியத்தில் தானே இப்படி பேசுறீங்க.

**@iam_susi**

20 வருசத்துக்கு முன்னாடி..

நகரத்துல இருந்து வந்து “சினிமா”ன்னா என்னன்னு கிராமம் கிராமமா விவசாயிகளுக்கு மத்தியில் பிரச்சாரம் பன்னாங்க..

இப்ப கிராமத்துல இருந்து வந்து “விவசாயம்” ன்னா என்னன்னு நகரம் நகரமா தொழிலாளர்கள் மத்தியில் பிரச்சாரம் பன்னிகிட்டு இருக்கோம்..

**@வாசுகி பாஸ்கர்**

மோடிக்கு முன் நிறைய நகைக்கடை விளம்பரம் வந்தது, மோடிக்கு பின் நிறைய அடகுக்கடை விளம்பரம் வருகிறது.

**@CreativeTwitz**

கர்நாடகா, ஒடிசா, வங்காளம், கேரளா தான் எங்களின் அடுத்த இலக்கு – அமித்ஷா

– அண்ணே அப்ப தமிழ்நாடு

– ஊரா தம்பி அது

**@urs_venbaa**

சம்பளம் ஆன செய்தி கிடைத்தவுடன் நமக்குள் இருக்கும் கவுண்டமணி வெளிப்படுகிறார்

“அந்த தெரு என்ன விலைனு கேளு”!

**@sultan_Twitz**

கம்யூனிஸ்ட் கட்சிக்கு இனி கேரளாவை தவிர வேறு எங்கும் கிளைகள் இல்லை – நாராயணன் பாஜக #

தமிழ்நாட்டில் பாஜக கிளையை ஓடிச்சி பல வருசமாச்சி

**@Kozhiyaar**

குழந்தையிடம் புற முதுகு காட்டுவது தோல்வியல்ல, வெற்றியே!!

#உப்பு_மூட்டை!!

**@nandhu_twitts**

தங்கச்சி மேல இருக்கற பாசமெல்லாம்,

வீட்ல மாட்டி விட கூடாதுனுதான்..!!

**@mekalapugazh**

பிச்சைக்காரனுக்கு அடுத்தவேளைக் கவலை மட்டுமே..

ஏழைக்கு அடுத்தநாள் கவலை..

நடுத்தரனுக்கு அடுத்த சில மாதக் கவலை..

பணக்காரனுக்குச் சில வருடக் கவலை..

அரசியல்வாதிக்கு மட்டுமே.. அடுத்த சில தலைமுறைக்கவலை.

**@BlackLightOff**

நம்ம வாழ்க்கையை தான் சினிமாவா படம்பிடித்து காட்டுகிறார்கள். ஆனா வாழ்க்கையை ஏதாச்சும் டயலாக் பேசினா “என்னடா சினிமா பாத்து கேட்டுபோயிட்டானு” கேக்றாங்க..என்ன சொல்ல.. #வாழ்க்கை #சினிமா

**@sendil__**

வாசலில் அப்பாவின் செருப்பு சத்தம் கேட்டதும் மகிழ்ச்சியுடன் ஓடி வந்து கதவை திறக்கும் குழந்தையின் செயல் ஆனந்தம் !!

**@chithradevi_91**

என் பையனுக்கு எந்த கெட்ட பழக்கமோ பேட் ப்ரண்ட்ஸோ கிடையாது அவன் உண்டு மொபைல் உண்டுனு இருப்பான் என்று பெருமிதம் கொள்ளும் பெற்றோர்களைப் பார்த்தால் பரிதாபம்தான் வருகிறது.

**@Kozhiyaar**

கவலைப்பட ஒரு பிரச்சனையும் இல்லையே என கவலைப்பட்டு கொண்டே அலைகிறது ஒரு கூட்டம்!!

**@amuduarattai**

நாம் தமிழன் என்பதை, பல “வாட்ஸ் அப்” மெசேஜ்களை, ஃபார்வேட் செய்தே நிரூபிக்க வேண்டியிருக்கிறது.

**@_thara__**

நாடு முழுசும் நாசமா போயி மாடு மட்டும் வாழ்ந்த கதை தெரியுமா?

**@kumarfaculty**

மொபைல் போன் கிடைத்ததும் ஏரோபிளேன் மோடுக்குச் சென்று விடுகிறார்கள் குழந்தைகள்…!!!

-லாக் ஆஃப்

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *