அகதிகளின் கல்வி: உலகப் பல்கலைக்கழகங்கள் கோரிக்கை!

public

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சர்வதேச உயர்கல்வி மாநாட்டில் அகதிகளின் கல்விக்கு உதவி செய்ய வேண்டும் என உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

உள்நாட்டுப் போர் மற்றும் மற்ற மோதல்களில் இருந்து தப்பிக்கும் லட்சக்கணக்கான அகதிகள் பிற நாடுகளில் தஞ்சமடைகின்றனர். 2015ஆம் ஆண்டின் முடிவில் எடுக்கப்பட்ட கணக்கின்படி உலகம் முழுவதும் 6.5 கோடிப் பேர் புலம்பெயந்தவர்களாகவும், அகதிகளாகவும் இருப்பதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவித்துள்ளது. 6.5 கோடி அகதிகளில் வெறும் 1% அகதிகளுக்கு மட்டுமே உயர் கல்வி கிடைக்கிறது.

கடந்த புதன்கிழமை (அக்டோபர் 11) ஹாபர்ட்டில் நடைபெற்ற ஆஸ்திரேலியா சர்வதேச உயர் கல்வி மாநாட்டில் பங்குபெற்ற போர்த்துகல் தூதர் ஹெலனா பரோகோ, “அடுத்த தலைமுறைத் தலைவர்களை உருவாக்க உயர் கல்வி அடிப்படையானது. அவர்களே நாட்டினை மீண்டும் கட்டியெழுப்பக்கூடியவர்கள். இதுபோன்ற நெருக்கடியில் இளைய சமுதாயத்திற்காக முதலீடு செய்யவில்லை என்றால் போரால் அழிந்த நாடுகளை மீண்டும் யார் கட்டியெழுப்புவார்கள்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

150 சிரியா மாணவர்களின் உயர் கல்விக்கான போர்த்துகலின் உதவித் திட்டத்தை இவர் முன்னெடுத்துவருகிறார். இது போன்ற உதவிகள் பல அகதிகளுக்குத் தேவைப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் அகதிகள் கவுன்சிலுடன் பணியாற்றும் மொனாஷ் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்ட மாணவி கரேன் துன்வுட்டே, “தற்காலிகப் பாதுகாப்பு விசாவில் உள்ளவர்கள் சர்வதேச மாணவர்களின் கட்டணத்தைக் கொடுத்தே இங்கு பயிலும் நிலையில் உள்ளனர். அதில் சிலருக்கே அரசு மற்றும் பல்கலைக்கழக உதவிக் கிடைக்கின்றது” என இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய குடிவரவுத் துறை அமைச்சர் பீட்டர் டட்டனின் செய்தித் தொடர்பாளர், “ஏற்கனவே ஆஸ்திரேலியாவின் வரிப்பணித்திலிருந்து ஓர் ஆண்டுக்கு 1.9 பில்லியன் டாலர்கள் அகதிகளின் நலனுக்காகச் செலவிடப்படுகிறது. அகதிகளுக்கான நல உதவிகளைத் தாராளமாக செய்யும் நாடுகளில் ஆஸ்திரேலியா முதன்மையாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

ஆரிப் ஹசாரா (22) ஆப்கானிஸ்தான் போரில் இருந்து தப்பித்து, 2011ஆம் ஆண்டு படகு மூலம் அடைக்கலம் தேடி, ஆய்வுப் பயணிகளைப் பெற ஆஸ்திரேலியாவிற்கு வந்தார். அந்தச் சூழ்நிலையால் தான் பாதிக்கப்படவில்லை என்றும் அதற்குப் பதிலாக தன் கவனத்தைத் திசைதிருப்ப ஆங்கிலம் கற்கத் தொடங்கியதாகவும் ஆரிப் ஹசாரா தெரிவித்துள்ளார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *