புல்லட் நேரு: திமுக மாநாட்டில் சுயேச்சைகளுக்கும் இடம்!

politics

திருச்சியில் திமுக சார்பில் வரும் 31 ஆம் தேதி நடக்கும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டுக்காக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு தலைமையில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இன்று மாலை கே.என்.நேரு மாநாடு நடக்கும் திருச்சி-மணப்பாறை சாலையில் அமைந்திருக்கும் கேர் கல்லூரி வளாகத்தில் மாநாட்டுப் பணிகளை மேற்பார்வையிட்டார். அப்போது அவருடன் திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் எ.வ.வேலு உடனிருந்தார்.

மாநாட்டு முகப்பில் நின்று கலைஞர், அண்ணா, பெரியார் மற்றும் ஸ்டாலின் படங்களை எங்கே, எப்படி வைக்க வேண்டும் என்று மாநாட்டு வடிவமைப்பாளருடன் ஆலோசனை நடத்திய நேரு… பந்தலுக்குள் சென்று ஒவ்வொரு இடமாக பார்வையிட்டார்.

இதுவரை இல்லாத அளவுக்கு அசைவ விருந்து, சைவ விருந்து என இருவகை விருந்துகள் இந்த மாநாட்டுக்காக ஏற்பாடு செய்யப்படுகின்றன. அந்த வகையில் சாப்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட இடத்துக்கு சென்று ஆய்வு செய்த நேரு, அங்கே பணியில் இருந்த ஊழியர்களிடம் சாப்பாடு தயாராகும் இடம், சாப்பாடை எடுத்து வரும் வழி பற்றியெல்லாம் கேட்டார். ‘இன்னைக்கே நாற்காலியெல்லாம் போட்டுடுங்க’ என்றவர் மேலே பார்த்துவிட்டு, ‘இன்னும் ஃபேன் போடலையா?” என்றார். சிறிது நேரத்தில் எலக்ட்ரிக் கான் ட்ராக்டருக்கு போன் போட்டு நேருவிடம் கொடுத்துவிட்டனர். ‘என்னப்பா… இன்னும் ஃபேன் போடலையா? சரிப்பா… சரிப்பா சீக்கிரம் போட்ருங்க” என்றபடியே நடந்தார் நேரு. பின்னர் முக்கிய நிர்வாகிகளுக்காக ஏற்பாடு செய்யப்படும் பஃபே சாப்பாட்டு பகுதியையும் பார்வையிட்டார். அதன் பிறகு கை கழுவும் இடத்துக்கு சென்று மோட்டார் எங்கே இருக்கிறது, தண்ணீர் செல்லும் பாதை என்ன என்பது பற்றியெல்லாம் ஆய்வு செய்தார்.

இப்படிப்பட்ட ஆய்விக்கிடையே தனது அலுவலகத்துக்கு போன் போட்டு, கூட்டத்தில் பேசுவது போல கடகடவென பேசி, ‘இதை அப்படியே அறிக்கையா ரெடி பண்ணி அனுப்பு. சரியா இருக்கான்னு பாத்துட்டு சொல்றேன்’ என்று உத்தரவிட்டார் நேரு.

சில மணி நேரத்தில் அந்த அறிக்கை ரெடியானது. “ தேர்தலில் வெற்றிபெற்ற உள்ளாட்சிப் பிரதிநிதிகளை அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் அவரவர் பொறுப்பில் காலை 9 மணிக்கு மாநாட்டுத் திடலில் அமர வைக்க வேண்டும். சுயேச்சையாக போட்டியிட்டு திமுகவில் இணைந்தவர்களுக்கும் மாநாட்டில் பங்கேற்க இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் சரியாக 9.30க்கு மாநாட்டுக்கு வருகை தர இருக்கிறார்” என்ற அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

திமுகவின் தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் ஆக அறிவிக்கப்பட்டு மூன்று நாட்கள் ஆகிவிட்ட பிறகும் இந்த அறிக்கையை, தனது மாவட்டச் செயலாளர் லெட்டர் ஹெட்டிலேயே வெளியிட்டிருக்கிறார் நேரு.

புல்லட்டில் ஏறிவரும் நேருவின் மேற்பார்வையில் திமுக மாநாட்டுப் பணிகள் புயல் வேகத்தில் நடந்து வருகின்றன.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *