டெஸ்டில் சறுக்கிய இந்தியா… டி20, ஒரு நாள் போட்டிகளில் ஸ்டேட்டஸ் என்ன?

Published On:

| By Selvam

ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்திலும், ஒருநாள், டி20 போட்டிகளில் இந்திய அணி முதலிடத்தையும் பெற்றுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று (மே 3) வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில், டெஸ்ட் போட்டியில் 124 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி முதலிடத்திலும், இந்திய அணி 120 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், இங்கிலாந்து அணி 105 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றதன் மூலம் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இருப்பினும் ஒருநாள், டி20 போட்டிகளில் இந்திய அணி தரவரிசை பட்டியலில் மீண்டும் முதல் இடத்தை தக்கவைத்துள்ளது.

ஒரு நாள் போட்டிகளில் இந்தியா 122 புள்ளிகள், அதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா 116, தென் ஆப்பிரிக்கா 112 புள்ளிகளைப் பெற்றுள்ளன.

டி20 போட்டிகளில் இந்தியா 264, ஆஸ்திரேலியா 257, இங்கிலாந்து 252 புள்ளிகளைப் பெற்றுள்ளன.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஓடி ஒளிய வேண்டாம்… : அமேதியில் ராகுல் போட்டியிடாததை கிண்டல் செய்த மோடி

தகிக்கும் வெயில்: கொஞ்சம் ரிலாக்ஸ்… வானிலை மையம் கொடுத்த கூல் அப்டேட்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share