நாடாளுமன்ற கட்டிடப் பணிகள்: மத்திய அரசுக்கு உத்தரவு!

politics

நாடாளுமன்ற கட்டிடப் பணிகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

தற்போதைய நாடாளுமன்றக் கட்டிடமானது பிரிட்டன் ஆட்சிக் காலத்தில் 1927ஆம் ஆண்டு கட்டப்பட்டது. எட்வின் லூடெய்ன்ஸ், ஹெர்பெர்ட் பேக்கர் ஆகிய இங்கிலாந்து பொறியாளர்கள் இந்தக் கட்டிடத்தை வடிவமைத்திருந்தனர். நாடாளுமன்றக் கட்டிடம் கட்டப்பட்டு 93 ஆண்டுகள் ஆகிவிட்டதாலும், எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாலும் புதிய கட்டிடம் கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதனையடுத்து 1400 பேர் அமரும் வகையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை கட்டுவதற்கான பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. ஆனால், கொரோனா காலத்தில் நிதி பற்றாக்குறை இருக்கும் நேரத்தில் புதிய கட்டிடம் கட்டுவது அவசியம்தானா என்ற கேள்விகளை எதிர்கட்சிகள் முன்வைத்தன.

இந்த நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்காக வரும் டிசம்பர் 10 ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்ட இருக்கிறார்.

இந்த நிலையில் நாடாளுமன்றக் கட்டிடம் தொடர்பான வழக்கு இன்று ( டிசம்பர் 7) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி கன்வீல்கர் தலைமையிலான அமர்வு, புதிய கட்டிடம் அமைக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்தது. நாடாளுமன்றக் கட்டிடம் குறித்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது கட்டுமானங்களை எப்படி தொடங்குகிறீர்கள் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கட்டுமானங்கள் நடக்கவில்லை என்பதை சொலிசிட்டர் ஜெனரல் உறுதிப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதை ஏற்ற மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா மட்டுமே தற்போது நடக்க இருக்கிறது. அதை கட்டுவதற்கான பணிகள் தற்போது நடைபெறாது” என்று உறுதியளித்தார். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது‌.

**எழில்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *