பெட்ரோல் டீசல் விலை குறைப்பு!

politics

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியைக் குறைத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

நாட்டில் பெட்ரோல் டீசல் மீதான விலை 100 ரூபாயைத் தாண்டி விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. சமையல் சிலிண்டர் விலை 1000 ரூபாயை தாண்டி விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (மே 21) ட்விட்டர் மூலம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பில், “பெட்ரோல் மீதான மத்திய கலால் வரியை லிட்டருக்கு ரூ 8 மற்றும் டீசல் மீது ரூ 6 குறைக்கப்படும். இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.5 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாய் வரை குறையும்” என்று தெரிவித்துள்ளார்.

இதனால் அரசுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும்” என்று தெரிவித்துள்ளார் நிர்மலா சீதாராமன்.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *