@புதுச்சேரியில் அமித்ஷா

politics

ாஜகவின் முக்கிய தலைவரும் ஒன்றிய உள்துறை அமைச்சருமான அமித் ஷா இன்று ஏப்ரல் 24 புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு சென்னை வந்தார்.
சென்னை வந்த அமித்ஷாவை தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வரவேற்றனர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த அமித்ஷா தன்னை வரவேற்க வந்த பாஜக தொண்டர்களை பார்த்ததும் காரிலிருந்து இறங்கி கையசைத்தார்.

நேற்று இரவு சென்னையில் தங்கிய அமித் ஷா இன்று காலை புதுச்சேரி புறப்பட்டார். புதுச்சேரியில் அமித்ஷாவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
மகாகவி பாரதி இல்லத்துக்குச் சென்ற அமித்ஷா பாரதியாரின் திருவுருவப் படத்துக்கு மரியாதை செலுத்தினார். அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டார்.
அரவிந்தர் ஆசிரம நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அமித்ஷா புதுச்சேரி பாஜக அலுவலகத்துக்கும் சென்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

**வேந்தன்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *