�
பீகார் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (நவம்பர் 10) காலை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில்… பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் ராஷ்டிரிய ஜனதா தள் தலைமையிலான மகாகத்பந்தன் கூட்டணியும் கடுமையான போட்டியில் இருக்கின்றன.
பகல் 12 மணி நிலவரப்படி தேசிய ஜனநாயக கூட்டணி 134 தொகுதிகளிலும் மகாகத்பந்தன் 96 தொகுதிகளிலும் மற்றவர்கள் 15 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கிறார்கள்.
வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்த இரண்டு மணி நேரத்துக்குள் மகாகத்பந்தன் கூட்டணி முன்னிலையில் இருந்த நிலைமாறி தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னேறிக் கொண்டிருக்கிறது.
அதனால் பாஜக அலுவலகங்களில் கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன. அதேநேரம் மகாகத்பந்தன் அணியினர், இப்போது எதையும் தீர்மானிக்க முடியாது பகல் 12 மணி நிலவரப்படி ஐந்து சுற்றுகள் தான் எண்ணப்பட்டுள்ளன. இன்னும் இருபது சுற்று வாக்குகள் எண்ணப்பட வேண்டும். மேலும் 70 தொகுதிகளில் மிகக் குறைவான வாக்கு வித்தியாசம் நிலவுகிறது. கிராமப்புறங்களில் வாக்கு நிலவரம் பற்றிய தகவல்கள் இன்னும் வரவில்லை. எனவே இப்போதைக்கு எதையும் முடிவு செய்ய முடியாது” என்று கூறுகிறார்கள்.
**-வேந்தன்**�,”