`உக்ரைன் போர்: மனதை உருக்கும் காட்சி!

politics

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் இரண்டாவது நாளாக நீடித்து வருகையில், அங்கு இருந்து வெளிவரும் புகைப்படங்கள் காண்போரின் கண்களை கலங்க வைக்கிறது.

நேற்று காலையில் தாக்குதலைத் தொடங்கிய ரஷ்ய படைகள் உக்ரைனின், கீவ், கார்கிவ், டினிப்ரோ நகரங்களில் உள்ள ராணுவ நிலைகள், விமான தளங்கள், ராணுவ கிடங்குகள் மீது குண்டுகளை வீசி அழித்தன. உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்ய படைகள் சில நகரங்களையும் கைப்பற்றியுள்ளதாக செய்திகள் வருகின்றன. இதுவரை 137 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், இதற்கு மேலும் உயிர் பலிகள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், உக்ரைனில் போரிட பொது அணி திரட்டல் உத்தரவிடப்பட்டுள்ளது. 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் போரில் பங்கேற்க உத்தரவிடப்பட்டுள்ளதால், அவர்கள் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெண்கள், குழந்தைகள் எல்லாம் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

அதன்படி கீவ்-வில் உள்ள மக்கள் எல்லாம் மீட்பு பேருந்துகள் மூலம் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து செல்லப்பட்டு வருகின்றனர். அங்கே பதிவான ஒரு வீடியோவில், ஒருவர் தனது மகளையும்,மனைவியும் பாதுகாப்பான இடத்துக்கு வழி அனுப்புகின்றனர். அந்த வேளையில் அந்த குழந்தை தன் தந்தையிடம் காகிதம் ஒன்றை நீட்டியது. அதை பிரித்துப் படித்த தந்தைக்கு சொல்ல முடியாத துயரம் ஏற்பட்டு அழுகிறார். தன் மகளை உச்சி முகர்ந்து, ‘மிஸ் யூ’ என்று சொல்லி கட்டி அணைத்து முத்தம் செய்கிறார். மீண்டும் தன் குடும்பத்தை பார்ப்போமா என்ற ஏக்கத்தில் உடைந்துபோய் தந்தை அழுவதை பார்க்கும், அந்த குழந்தையும் அழுகிறது. இருவரும் கட்டிபிடித்துக் கொண்டு அழுகின்றனர். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது பார்ப்போரின் கண்களில் கண்ணீர் வரவழைத்தது.

மற்றொரு வீடியோவில், உக்ரைனின் சிப்பாய் ஒருவர், “நாங்கள் கடுமையான சூழ்நிலையில் உள்ளோம். லவ் யூ அம்மா.. அப்பா..உங்களை மீண்டும் பார்க்க முடியுமா என்பதை உறுதியாக சொல்லமுடியவில்லை” என்று தெரிவித்துள்ளார். இதுபோன்று பல்வேறு சம்பவங்கள் அங்கே அரங்கேறி வருகின்றன.
**-வினிதா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *