கி.வீரமணிக்கு கொரோனா: எப்படி இருக்கிறார்?

politics

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு(88) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா மூன்றாம் அலை தமிழகத்தில் வேகமாகப் பரவுகிறது. நேற்று ஒரே நாளில் 23,443 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜனவரி 1 ஆம் தேதி 1,489 ஆக இருந்த ஒருநாள் பாதிப்பு தற்போது 23,443 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவின் பிடியில் பொதுமக்கள் மட்டுமின்றி பல நடிகர்கள், நடிகைகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமீப நாட்களாக அவருக்குச் சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டதைத் தொடர்ந்து ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ததில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் கிண்டி கிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது உடல்நிலை சீராக இருப்பதாக அவருக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், கி.வீரமணியின் உடல்நலம் குறித்து மருத்துவமனை இயக்குநரிடம் விசாரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், கி. வீரமணி அவர்களுக்கு கொரோனா தொற்று பாதித்தது என்ற செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியடைந்தேன். அவர் சிகிச்சை பெற்று வரும் கிண்டி மருத்துவமனை இயக்குநரிடம் விசாரித்தேன். அவர், கி.வீரமணி நலமுடன் உள்ளதாகவும், விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் எனவும் தெரிவித்தார். தமிழகத்தில் மூத்த தலைவராகத் திகழும் கி. வீரமணி அவர்கள் விரைவில் முழு உடல் நலம் பெற்றுத் திரும்ப வேண்டுமென விழைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

**-பிரியா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *