தினசரி கொரோனா பாதிப்பு: முதலிடத்தில் எந்த மாநிலம்?

politics

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் தமிழகம் முதலிடத்திலும் கேரளா இரண்டாவது இடத்திலும், கர்நாடகா மூன்றாவது இடத்திலும் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,67,334 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 74.46 சதவீதம் பேர் 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். தினசரி கொரோனா பாதிப்பில் தமிழகம்( 33,059) முதலிடத்திலும், கேரளா( 31,337) இரண்டாம் இடத்திலும், கர்நாடகா(30,309) மூன்றாவது இடத்திலும் உள்ளது. இதற்கடுத்தபடியாக முறையே மகாராஷ்டிரா(28,438), ஆந்திரா(21,320), மேற்குவங்கம்(19,428), ஒடிசா (10,321), உத்தரப்பிரதேசம்( 8,673) ராஜாஸ்தான் ( 8,398), ஹரியானா (7,774) என பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

அதுபோன்று, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா, கர்நாடகம், டெல்லி ஆகிய மாநிலங்கள் முதல் மூன்று இடத்தில் உள்ளன. இதற்கடுத்தபடியாக, தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம் உள்ளன.

இருப்பினும், இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து தினசரி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து 6வது நாளாக அதிகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,89,851 பேர் குணமடைந்துள்ளனர்.

நாட்டில் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,19,86,363 எட்டியுள்ளது. இது 86.23 சதவீதமாகும்.

இந்தியாவில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 20.08 லட்சம் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. நாட்டில் இதுவரை 32 கோடிக்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தியாவில் இன்று காலை 7 மணி வரை 27,10,934 முகாம்கள் மூலம் 18,58,09,302 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

கடந்த ஒரு வாரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 13 சதவீதம் குறைந்துள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த வாரத்தில் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா முதல் இடத்திலும் கேரளா இரண்டாவது இடத்திலும் தமிழகம் மூன்றாவது இடத்திலும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *