திருமண மண்டபங்களில் மதுபானம்: சிறப்பு உரிமம் ரத்து!

அரசியல்

திருமண மண்டபங்கள் விளையாட்டு மைதானங்களில் மதுபானம் வழங்க சிறப்பு உரிமம் வழங்குவதற்கான அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பார்கள், நட்சத்திர விடுதிகளில் மட்டுமே மதுபானம் அருந்த உரிமம் வழங்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் சிறப்பு அனுமதி பெற்று மதுபானம் வழங்கும் உரிமையை பெறலாம் என்று தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டது.

தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு அதிமுக, பாஜக, பாமக, அமமுக, நாதக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதனை தொடர்ந்து மதுபானம் வழங்க அனுமதி அளிக்கப்பட்ட சிறப்பு உரிமம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“வணிக வளாகங்கள்‌ உட்பட மாநாடுகள்‌ நடைபெறும்‌ இடங்கள்‌, கூட்ட அரங்குகள்‌, விருந்து மண்டபங்கள்‌, விளையாட்டு மைதானங்கள்‌ ஆகியவற்றில்‌ மதுபானம்‌ வைத்திருப்பதற்கும்‌, பரிமாறுவதற்குமான சிறப்பு உரிமம்‌,

கர்நாடகா, மகாராஷ்டிரா பஞ்சாப்‌, இமாச்சல்‌ பிரதேசம்‌, புதுதில்லி போன்ற சில மாநிலங்களில்‌ நடைமுறையில்‌ உள்ளவாறு, தமிழ்நாட்டிலும்‌ வழங்கிட 19-3-2023அன்று அரசிதழில்‌ பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கையில்‌, திருமணக்‌ கூடங்களும்‌, இதர இடங்களும்‌ இடம்‌ பெற்றிருந்தன.

இதுகுறித்து பெறப்பட்ட கருத்துக்களை கவனமுடன்‌ பரிசீலித்த தமிழ்நாடு அரசு தற்போது இவற்றை நீக்கி, வணிக வளாகங்களில்‌( Commercial Complex ) உள்ள மாநாட்டு மையங்கள்‌(Convention Centres),

கூட்ட அரங்குகள்‌(Conference Hall) ஆகியவற்றில்‌ நடைபெறும்‌ தேசிய நிகழ்வுகள்‌, பன்னாட்டு நிகழ்வுகள்‌,

உச்சி மாநாடுகள்‌ மற்றும்‌ சர்வதேச மற்றும்‌ தேசிய விளையாட்டு நிகழ்வுகள்‌ நடைபெறும்‌ விளையாட்டு மைதானங்கள்‌/விளையாட்டு அரங்குகளில்‌ அந்த நிகழ்வுகள்‌ நடைபெறும்போது மட்டும்‌ மதுபானம்‌ வைத்திருத்தல்‌ மற்றும்‌ பரிமாறுவதற்கான தற்காலிக உரிமம்‌ வழங்கப்படும்‌ என்று திருத்தப்பட்ட அறிக்கையினை இன்று வெளியிட்டுள்ளது.

அதேபோன்று, இதுகுறித்து மேற்குறிப்பிட்ட அரசிதழில்‌ வெளியிடப்பட்டிருந்த வணிகப்‌ பகுதிகள்‌ அல்லாத இடங்களில்‌ நடைபெறும்‌ கொண்டாட்டங்கள்‌, விழாக்கள்‌, விருந்துகள்‌ போன்றவற்றில்‌ மதுபானம்‌ வைத்திருந்து பரிமாறுவதற்கான சிறப்பு உரிமம்‌ வழங்குவதற்கான முறையையும்‌,

இந்த திருத்தப்பட்ட அறிவிக்கையில்‌ நீக்கம்‌செய்து தமிழ்நாடு அரசிதழில்‌ வெளியிடப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வம்

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *