பாஜகவின் 2-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியல்… முக்கிய நபர்கள் யார் யார்?
72 பேர் அடங்கிய இரண்டாவது வேட்பாளர்கள் பட்டியலை பாஜக இன்று (மார்ச் 13) வெளியிட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் பாஜக கடந்த மார்ச் 2ஆம் தேதி 195 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது.
இதில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரது பெயர் இடம் பெற்றிருந்தது.
இந்நிலையில் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை இன்று (மார்ச் 13) பாஜக தலைமை வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலின் படி, மக்களவைத் தேர்தலில் போட்டியிட மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பியூஸ் கோயல் அனுராக் சிங் தாக்கூர், பிரகலாத் ஜோஷி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
72 பேர் கொண்ட இந்த பட்டியலில், கர்நாடக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, ஹரியானா முன்னாள் முதல்வர் (நேற்றுதான் ராஜினாமா செய்தார்) ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பெங்களூரு தெற்கில் இருந்து பாஜக இளைஞர் அணித் தலைவர் தேஜஸ்வி சூர்யா, ஹாவேரியில் இருந்து கர்நாடக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை. இமாச்சலப் பிரதேசத்தின் ஹமிர்பூரில் இருந்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்,
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இருந்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, கர்நாடகாவின் தார்வாட் தொகுதியில் இருந்து பிரகலாத் ஜோஷி, மும்பை வடக்கு தொகுதியில் இருந்து பியூஸ் கோயல் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இரண்டாவது பட்டியலில் டெல்லி, கர்நாடகா, குஜராத், ஹ்ரியானா, ஹிமாச்சல பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, தெலங்கானா, திரிபுரா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன.
தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதி கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய கல்வி மக்கள் முன்னேற்றக் கழகம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ள நிலையில் முதல் பட்டியலிலும், இரண்டாவது பட்டியலிலும் தமிழ்நாடு இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
Jason Sanjay: படத்துக்கு ‘ஹீரோ’ கெடைச்சாச்சு!
வெளிநாட்டில் தங்கச் சுரங்கம்…விதவிதமாய் துப்பாக்கி… டுபாக்கூர் கமாண்டோவை ’தூக்கிய’ போலீஸ்!