மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 2 ஜுன் 2020

அரசு பணத்தில் விளம்பரம்: காங்கிரஸ் எதிர்ப்பு!

அரசு பணத்தில் விளம்பரம்: காங்கிரஸ் எதிர்ப்பு!

விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் அரசு பணத்தை யாத்திரை போன்றவற்றுக்கு செலவு செய்ய தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது.

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநில சட்டப்பேரவைகளுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் சட்டப் பிரிவு தலைவர் விவேக் தங்கா எம்.பி., இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு நேற்று (செப்டம்பர் 9) எழுதியுள்ள கடிதத்தில், “முதல்வர்களும் மாநில அரசுகளும் மக்கள் வரிப்பணத்தில் தேசிய பத்திரிகைகளில் பெரிய அளவில் விளம்பரங்கள் செய்து உற்சாகம் காண்பதை மக்கள் பார்த்து வருகின்றனர். இது மோசமான நடைமுறை மட்டுமல்ல, பொது நிதியைத் தவறாக பயன்படுத்துவதுமாகும்.

ம.பி., ராஜஸ்தான், மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.இந்த மாநிலங்களில் அரசு சார்பில் ஜன் ஆசிர்வாத் யாத்ரா, கவுரவ் யாத்ரா, மற்றும் விகாஷ் யாத்ரா என்ற பெயரில் யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் இவற்றுக்கு ஆர்வம் காட்டவில்லை. எனவே, யாத்திரைக்கு மக்கள் வரிப்பணத்தை செலவிடுவதை நிறுத்த உத்தரவிட வேண்டும்” என்று கோரியுள்ளார்.

இதேபோல், தெலங்கானாவின் இடைக்கால முதல்வராக உள்ள சந்திர சேகர ராவ் புகைப்படத்துடன் அரசு விளம்பரங்களை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தெலங்கானா தலைமை செயலாளருக்கு கெடுபிடி உத்தரவுகளை தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கேட்டுக்கொண்டுள்ளது.

திங்கள், 10 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon