origin stories plantations computers 2

தோட்டத் தொழிலாளர்கள் தொழில்துறை அடிமைகளாக மாறியது எப்படி? – பாகம் 2!

சிறப்புக் கட்டுரை

நோக்கம் origin stories plantations computers 2

தமிழ் ஊடக வரலாற்றில் ஒரு புதிய முயற்சியாக, உலக அரங்கில் வெளியாகும் சிறப்புக் கட்டுரைகளை தமிழ் உலகில் அறிமுகம் செய்யும் நோக்கத்தில், மின்னம்பலம் இணையதளம் மற்றும் அமெரிக்காவின் பெருமைமிகு கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ’லாஜிக்ஸ்’ பத்திரிக்கை இணைந்து வழங்கும், உலகப்புகழ்பெற்ற சிக்னல் (Signal) செயலியின் தலைவர் மெரிடித் விட்டேக்கர் எழுதும் சிறப்புத் தொடர் இது.

தோட்ட தொழிலாளர்களின் அவலங்களையும், தொழிற்துறையின் மற்றொரு பரிமாணம் மற்றும் அதன் வரலாற்றையும் ஆழமாக எடுத்துரைக்கும் இத்தொடரை, புது முயற்சிகளை புத்துணர்ச்சியுடன் தொடரும் நம்முடைய மின்னம்பலம் இணையதளத்தில் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.

பாபேஜும் தோட்ட மேலாண்மையும்

19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தொழிலாளர் கட்டுப்பாட்டுக் கோட்பாடுகளை பாபேஜ் உருவாக்கினார். இது தொழிற்சாலை நிர்வாகத்தையும் முந்தைய நடைமுறையும் ஒழுங்கமைப்பதற்கு உதவியாக இருந்தது. பின்னர் வந்த ஃபிரடெரிக் வின்ஸ்லோ டெய்லர் அந்தக் கோட்பாட்டை “அறிவியல் மேலாண்மை” என்று குறிப்பிட்டார்.

பாபேஜ், தனது புகழ்பெற்ற படைப்பான ஆன் தி எகனாமி ஆஃப் மெஷினரி அண்ட் மேனுஃபேக்ச்சர்ஸ் இல் தொழிலாளர் ஒழுக்கம் குறித்த தனது கருத்துகளை ஆவணப்படுத்தினார். இது மேற்கிந்திய அடிமை முறையை ஒழித்துவிடுவது என பிரிட்டன் முடிவெடுப்பதற்கு ஒரு ஆண்டுக்கு முன்பு வெளியிடப்பட்டது.

ஆடம் ஸ்மித்தின் கூற்றுகளின் அடிப்படையில் எழுதப்பட்ட அவரது படைப்பு, தோட்டத்தில் பின்பற்றப்பட்ட தொழிலாளர் பிரிவு, கண்காணிப்பு, உற்பத்தியைப் பெருக்கிய முறைகளை புகழ்ந்து பேசுகிறது.

“அடிமை வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும்” நிர்வகித்துக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் அடிமைப்படுத்தப்பட்ட தொழிலாளர்களைப் பிரித்த, அவர்களின் அன்றாடச் செயல்களை வரையறுத்த, அவர்களின் அசைவுகளை திருத்திய அதிகாரத்துவ தொழில்நுட்பங்கள் மூலம் அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் மீதான அதிகாரம் செயல்படுத்தப்பட்டது என்பதை சிமோன் பிரவுன் தனது டார்க் மேட்டர்ஸ்: ஆன் தி சர்வெய்லன்ஸ் ஆஃப் ப்ளாக்நஸ் இல் சுட்டிக் காட்டுகிறார்.

11 தோட்டங்களில் உள்ள அடிமைகளின் வாழ்வும் உழைப்பும் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்ததுடன் அவற்றை அளவிடும் அளவீடுகளும் வேறு வேறாக இருந்தது. அந்தப் பிரிவுகளும் அளவீடுகளும் ஒன்றன் மீது ஒன்று செலுத்திய தாக்கத்தை அவரது படைப்பு தெளிவுபடுத்துகிறது. மேலும் அந்தப் பிரிவுகள் அடிமைப்படுத்தப்பட்ட மக்களைக் கண்காணிப்பதற்கு மேற்பார்வையாளர்களுக்கும் மேலாளர்களுக்கும் எப்படி உதவியது என்பதையும் விவரிக்கிறது.

12 தோட்டத்திலோ அல்லது தொழிற்சாலையிலோ உற்பத்தி குறைந்தால், வேலையைச் செய்பவர்களிடம் இருக்கும் அதிகாரம், தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் உழைப்பின் மீது ஒரு நிலையான கண்ணோட்டத்தை வரையறுத்து மேற்பார்வை செய்வதன் மூலம் பயனடையும் உரிமையாளர்களிடம் சேரும். அத்தகைய கண்ணோட்டம் தானாகவே தோன்றாது. மாறாக, இது பதிவுகள், அளவீடுகள், தரமான மதிப்பீடுகள் ஆகியவை மூலம் ஏற்படுகிறது.

மேலும் “பதிவு செய்வது” என்பது “கண்காணிப்பு” என்பதற்கான பொருளாக நாம் புரிந்து கொள்ள வேண்டும். வேலையையும் தொழிலாளர்களையும் கண்காணித்தல் மற்றும் அளவீடு செய்தல் என்பது தோட்டத்தில் பத்திரப்படுத்தும் பதிவுகளை அதிகரிப்பதில் உள்ள முதன்மையான விவாதிற்குரிய மிக முக்கியமான படியாகும்.

சேவை – உழைப்பு  origin stories plantations computers 2

தரவுகளும் தகவலும் தேவைப்படும் இந்தப் பதிவுகள், வேலையையும் தொழிலாளர்களையும் இயன்றவரை கண்காணிக்கக் கூடியதாகவும் அளவிடக் கூடியதாகவும் மாற்றும் சேவையில், உழைப்பு எவ்வாறு பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது என்பதை வடிவமைத்தது.

தொழிலாளர் கண்காணிப்பு, கட்டுப்பாடு ஆகியவை பாபேஜின் கோட்பாடுகளின் முக்கியமான அம்சமாகும். பாபேஜின் புத்தகத்தில் உள்ள ஒரு அத்தியாயம், தொழிற்சாலை செயல்பாடுகளைப் புரிந்துகொண்டு நிர்வகிக்க விரும்புபவர்கள் என்னென்ன “தரவை” சேகரிக்க வேண்டும் என்று வாசகர்களுக்கு அறிவுறுத்துகிறது.

பாபேஜ் விரும்பிய தரவுகளுக்கும் தோட்ட உரிமையாளர்கள், மேலாளர்கள், மேற்பார்வையாளர்கள் ஆகியோர் தோட்ட தொழிலாளர் நடைமுறைகளை உருவாக்குவதற்கு வழிவகுத்த  தரவு மற்றும் அளவீடுகளுக்கும் இடையே தெளிவான ஒற்றுமைகள் உள்ளன.

ஒரு பணியை முடிப்பதற்கு எத்தனை தொழிலாளர்கள் தேவைப்படுவார்கள், அவர்களின் வேகம், ஒரு நாளுக்கு ஒரு வேலைக்கு ஒரு தொழிலாளியின் உற்பத்தி ஆகியவற்றை கண்காணிப்பது, வேலையை முடிக்கத் தேவையான கருவிகள் மற்றும் உபகரணங்கள், கொடுக்கப்பட்ட முயற்சியை நிறைவேற்றத் தேவையான திறன்கள் ஆகியவற்றைப் பதிவு செய்ய இரண்டிலும் அறிவுறுத்தப்படுகிறது.

13 பாபேஜிற்கும் தோட்ட மேலாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கும், தொழிலாளர் ஒப்பந்தங்களில் சேர்க்கப்பட்ட இத்தகைய கண்காணிப்புடன், குறிப்பிடும்படியான வன்முறையும் ஒழுக்கமும் லாபத்தையும் உற்பத்தித்திறனையும் பெருக்குவதற்கு உதவியது.

முதலாளி – தொழிலாளர் 

பாபேஜ், தரவு சேகரிப்பை (கண்காணிப்பு எனவும் அழைக்கப்படும்)  வெளிப்படையாக அறிவுறுத்தியது மட்டுமல்லாமல் , தொழிலாளர்களைப் பிரிப்பதும் தொழிலாளர் செயல்முறையைப் பிரிப்பதுமே கண்காணிப்பை  அதிகரிக்கும் என்பதையும் அவரது புத்தகத்தில் சுட்டிக்காட்டுகிறார்.

முதலாளிகளும் மேற்பார்வையாளர்களும் கொடுக்கப்பட்ட வேலையின் ஒவ்வொரு பகுதியையும் முதலில் வரையறுத்துக் குறிப்பிட்டு, அவற்றை முறையாக அளவிடக்கூடிய அமைப்பை உருவாக்குவது தொழிலாளர் பிரிவுக்கு அவசியமானதாகும். குறிப்பாக, இது தொழிலாளர்களை இணக்கத்துடன் வேலை செய்ய வைக்க உதவும்.

14 இது வேலையை (மற்றும் அதைச் செய்யும் நபர்களை) மிகவும் எளிதாகக் கண்காணிக்கக் கூடியதாகவும், அளவிடக் கூடியதாகவும், கட்டுப்படுத்தக் கூடியதாகவும் மாற்றும். முன்கூட்டியே குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு பணியும் அதன் மீதான எதிர்பார்ப்பும் முன்னரே தீர்மானிக்கப்பட்ட அளவுகோல் அல்லது எதிர்பார்ப்புகளின் அடிப்படையில் அளவிடப்படலாம்.

தொழிலாளர் செயல்முறையின் பிரிவும் நிபந்தனைகளும்  கண்காணித்தவற்றின் அடிப்படையில் “மேம்படுத்துவதை” இயலச் செய்கிறது. இது, தொழிலாளர்களை அளவிடக் கூடியவர்களாகவும் மாற்றக் கூடியவர்களாகவும் மேற்சொன்னவற்றிலிருந்து சீரமைக்கவும் மறுசீரமைக்கவும் இணக்கமானவர்களாவும் பார்க்கும் தோட்ட தர்க்கங்களை கருவாகக் கொண்டுள்ள நிர்வாக மேற்பார்வை மற்றும் ஒழுக்கத்தின் பின்னூட்ட வளையத்தை உருவாக்குகிறது.

நடைமுறையில் இத்தகைய “சீரமைப்புகள்” செயல்படுவதை நிச்சயமாக எந்த இனம் என்பதே தீர்மானித்தது. இது, அடிமைப்படுத்தப்பட்ட கறுப்பின மக்களின் விஷயத்தில் அடிபணிதலையும் வன்முறையைப் பயன்படுத்துவதையும் நியாயப்படுத்தி இயல்பாக்கிய அதே நேரத்தில் “சுதந்திரமான” வெள்ளைத் தொழிலாளர்களுக்கு இத்தகைய கொடூரத்தை குறைத்தது.

பதிவு செய்தல், கண்காணித்தல் ஆகிய நடைமுறைகள், சில நூறு அடிகள் அல்லது ஆயிரக்கணக்கான மைல்கள் இடைவெளியில் இருந்தாலும், “தூரத்தில் இருந்து கொண்டே நிர்வாகம்” (அல்லது, “அதிகார மட்டத்திலிருந்து கட்டுப்பாடு”)  செய்வதையும் இயலச் செய்கிறது.

மக்களையும் அவர்களின் செயல்பாடுகளையும் அளவிடக்கூடிய பண்டங்களாகப் குறிப்பிடுவதன் மூலம், கட்டுப்பாட்டைச் செலுத்த விரும்புவோர், தாங்கள் எடுக்கும் முடிவுகளால் ஏற்படும் விளைவுகள் உண்மையல்ல என மறுப்பதற்கான அதிகாரத்தையும் தக்கவைத்துள்ளார்கள்.

தோட்ட அடிமை முறையைப் பொறுத்தவரை, தூரத்தில் இருந்து கொண்டே நிர்வாகம் செய்வது, வன்முறையையும் கொடூரங்களையும் மறுப்பதற்கு உரிமையாளர்களுக்கு சில வழிவகைகளை வழங்கியது, தோட்டம் அதன் இயக்குனரின் கட்டுப்பாட்டின் கீழ் ஒரு இயந்திரகதியாக இயங்குவதாக ஒரு அருவத்தை உருவாக்குகிறது.

சர்க்கரைத் தோட்டங்கள் 

நிக்கோலஸ் ஃபியோரி சர்க்கரைத் தோட்டங்களின் இயக்கத்திற்கான சமகால கையேட்டை மேற்கோள் காட்டுகிறார், இது இயந்திரகதியான கட்டுப்பாட்டு அருவத்தின் கற்பனைகளைப் பற்றி பேசுகிறது: “‘நன்கு கட்டமைக்கப்பட்ட இயந்திரம், ஆற்றல் மற்றும் முக்கியமான திருகு சூழல்கள் அல்லது முதன்மை பாகங்கள் சரியாக இருப்பதைச் சார்ந்திருப்பதைப் போல [தோட்டத்தின்] முழுமையான வெற்றி முக்கியமாக இதில் அடங்கியுள்ளது.”

தொழிற்சாலைகள், தோட்டங்கள் ஆகிய இரண்டிலும், கண்காணிப்பு நடவடிக்கைகள் மக்களின் வாழ்க்கையைத் தீர்மானித்ததும், தொழிலாளர் செயல்முறையை கட்டமைத்ததுமான மதிப்பீட்டு முறைகளைத் தெரிவித்தன.

அடிமை முறைச் சூழலில், கடத்தி அடிமைப்படுத்தப்பட்ட கறுப்பின மக்கள் விற்பனைக்காகவும் கடனாக அனுப்புவதற்காகவும், ஒரு நபரின் உற்பத்தித் திறனைத் தெரிந்துகொண்டு அதன் மதிப்பை அவர்களின் முக்கியமான அளவுகோலாகக் கொண்டு வகைப்படுத்தப்பட்டதன் அடிப்படையில்  தரவரிசைப்படுத்தப்பட்டனர், மதிப்பிடப்பட்டனர் மற்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டனர்.

அடிமைப்படுத்தப்பட்ட மக்கள், “அவர்கள் செய்யக்கூடிய வேலையின் அளவை மதிப்பிடுவதற்கான முதன்மை அளவுகோலுடன்”, மதிப்பிடப்பட்ட அவர்களின் உற்பத்தித்திறன், அவர்களின் உடல் தோற்றம், அவர்களின் கருவுறும் ஆரோக்கியம், பிற பண்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் அடிமைத்தனத்திலிருந்து இலாபம் பெறும் கடத்தல்காரர்கள், தோட்ட மேலாளர்கள், பிறரால் மதிப்பிடப்பட்டனர்.

15 தொழிலாளர்களை மதிப்பிடுவதற்கான வழிமுறைகளையும்  பாபேஜ் முன்மொழிந்தார். தொழிலாளர் அறிஞர் ஹாரி பிரேவர்மேன் “பாபேஜ் கொள்கை” என்று குறிப்பிட்டதில், ஒரு சிக்கலான பணியை சிறு சிறு கூறுகளாகப் பிரித்து அவற்றை “குறைந்த திறன் தேவைப்படுபவை” என்று குறிப்பிடுவது, அந்தக் கூறுகளில் ஒவ்வொரு பகுதியையும் செய்து முடிப்பவருக்கு குறைவாக ஊதியம் வழங்குவதை நியாயப்படுத்த முடியும் என்பதை பாபேஜ் விவரித்திருந்தார்.

origin stories plantations computers 2

தொழிலாளியின் மதிப்பு 

16 பாபேஜ் கொள்கையின் மையமாக வேலை மற்றும் தொழிலாளியின் மதிப்பை வரையறுப்பதற்கும், தொழிலாளர் செயல்முறையின் வரையெல்லையையும் முறையையும் கட்டுப்படுத்துவதன் மூலம் அவ்வாறு செய்வதற்கும், மறைமுகமான உரிமை முதலாளிக்கு உள்ளது.

பாபேஜைப் பொறுத்தவரையில் மதிப்பீடு என்பது “திறனை” வகைப்படுத்துவதுடன் தொடர்புடையதாகும், தொழிலாளர் பிரிவு மூலம் முதலாளியால் நிர்ணயிக்கப்பட்ட வரையெல்லையைக் கொண்டு  செய்து முடிக்கப்பட்ட பணியின் வரையெல்லையின் அடிப்படையில் திறன் மதிப்பிடப்பட்டது.

17 “திறன்” என்பதை வரையறுக்கும் முயற்சியில் வெளிப்படும் அதற்கு இணையான ஒரு கருத்திற்கு பாபேஜ் தன் கவனத்தைத் திருப்புகிறார்: ஒரு தொழிலாளி தனது வேலைக்குக் கோரக்கூடிய ஊதியத்தின் அளவைக் கொண்டு ஒரு தொழிலாளியின் “திறன்” தீர்மானிக்கப்படுகிறது: திறன் “அந்தத் தொகைகளால் அளவிடப்படலாம்.”

18 எனவே, ஒரு முதலாளி வேலைக்கான ஊதியமாகக் கொடுக்க ஒப்புக்கொள்ளும் தொகைக் கொண்டு திறமையைக் கணக்கிடலாம்.

இந்த சுற்றிவளைத்த வரையறை மூலம், தோட்டத்தில் மதிப்பீடு செய்தது போல திறமை என்பது ஒரு நபர் எவ்வளவு லாபம் ஈட்ட முடியும் என்பதற்கான குறியீடுதான் என்பதை இறுதியாக பாபேஜ் ஒப்புக்கொள்கிறார். இது முதலாளியின் அதிகாரத்தையும் மதிப்பீட்டையும் தான் பிரதிபலிக்கிறதே அன்றி வேலையைச் செய்பவர் அல்லது அவர்கள் செய்யும் வேலையின் தன்மையை அல்ல.

“திறன்” என்பதை பாபேஜ் எவ்வாறு பயன்படுத்தப்படுத்துகிறார் என்பதை முழுமையாகப் புரிந்து கொள்வதற்கு, வளர்ந்து வரும் தொழில்துறை தொழிலாளர் காலகட்டத்தின் உச்சத்தில் “சுதந்திரம்” பற்றிய புரிதலை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும், அப்போது பாபேஜ், ஒப்பந்தத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டதாகத் தெரிந்த சுதந்திரத்துடன் இணைந்து “திறன்” என்பதைத் தீர்மானிக்கவும் புரிந்துகொள்ளவும் உழைத்தார்.

கத்தாரில் புலம்பெயர்ந்தோரின் வேலையிலும் திறனிலும் உள்ள அரசியலைப் பற்றிய தனது ஆய்வில், நடாஷா இஸ்கந்தர், திறன் என்ற கருத்து “சுதந்திரம்” என்ற கருத்துடன் இறுக்கமாக இணைக்கப்பட்டிருப்பதாகக் காட்டுகிறார் – தொழிலாளர் பிரிவுகளில் மறைமுகமாக “திறமையின்மையின் பண்பை அடிப்படையாகக் கொண்டு அதன் ஒரு பிரதிபலிப்பாகவோ அல்லது செயல்பாடாகவோ அடிமை முறை மறுகட்டமைக்கப்படும்”

.19 “திறமையற்றவர்களுக்கான” பாதுகாப்பில்லாத ஆதிக்க நிலைமைகளை நியாயப்படுத்தும் “தகுதியின்” படிநிலையை உருவாக்கி, கொத்தடிமை நிலைமைகளை உருவாக்கி இயல்பாக்குவதற்கு திறமை எனும் பதமும் எது திறமை எது திறமையின்மை என்பதை வரையறுப்பதற்கான அதிகாரம் தங்களுக்கு இருப்பதாக முதலாளிகள் கூறுவதும் எவ்வாறு செயல்படுகிறது என்பதை இஸ்கந்தர் விளக்குகிறார்.

20 “சுதந்திரமான” வேலைச் சூழலில், “திறன்” என்பது ஏதோ (வெள்ளை) தொழிலாளர்களுக்கு உரித்தானது போலவும் ஒரு தொழிலாளி முதலாளி விரும்பும் இலாபத்தில் இருந்து பெறக்கூடிய ஊதியத்தின் குறியீடாகவும் பயன்படுத்தப்படுகிறது-கோட்பாட்டளவில் அந்தத் தொகையை மாற்றித் தருமாறு அவர்கள் பேரம் பேசலாம் அல்லது  ஏற்க மறுக்கலாம். தோட்டத்தில், அடிமைப்படுத்தப்பட்ட கறுப்பின மக்கள் திறமையானவர்களாகக் கருதப்படவில்லை.

அவர்கள் திறமையைக் கொண்டிருக்க இயலாதவர்களாகக் கூறப்பட்டனர், மேலும் அவர்கள் வெளிப்படுத்திய எந்தவொரு திறமையும் உடல் ரீதியான வேறுபாடுகள் காரணம் என்றாலும் அவர்களைத் தாழ்ந்தவர்களாகக் குறிப்பிடுகிறார்கள் – அவர்கள்  விலங்கு திறன் கொண்டவர்கள் அவர்களிடம் மனித புத்திசாலித்தனம் இல்லை என்றார்கள்.

origin stories plantations computers 2

 

இன பாகுபாடு origin stories plantations computers 2

இனப் பாகுபாட்டால் பிரிக்கப்பட்டவர்கள் ஆரம்பத்தில் திறன் படைத்தவர்களாகக் கருதப்பட்ட அதே வேளையில் சுதந்திரம் இல்லாத நிலைக்குத் தள்ளுவதற்கு திறமையில்லாதே காரணம் என்பது கருப்பாக இருப்பதனால் ஏற்பட்ட நிலையானது.

21 பாபேஜ் பயன்படுத்தும் திறன், தோட்டத் தொழில்நுட்பங்களால் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தாலும், “சுதந்திரமான” தொழிலாளர் வகையை உருவாக்கும் திட்டத்தில் உள்ள ஒப்பந்தத்துடன் இணைந்து செயல்படுகிறது. “சுதந்திரமான” வேலை என்ற கருத்துருவிற்குப் பின்னால் ஒப்பந்தமும் சுதந்திரம் பற்றிய அதன் கருத்துகள் மறைமுகமாக உள்ளதைப் போலவே, திறன் பற்றிய கருத்தாக்கமும் உள்ளது.

பாபேஜின் கட்டமைப்பில், (வெள்ளை) தொழில்துறைத் தொழிலாளர்கள் (சில) திறன்களைக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது, ஆகையினால் அடிமைப்படுத்தப்பட்ட கறுப்பின மக்களுக்கானதாகக் கருதப்படும் சுதந்திரமற்ற வகைக்கு வெளியே இருப்பார்கள்.

தொழிலாளர்களின் “வேலைக்கான திறனைக் குறைக்கும்” திட்டத்தில் தொழிலாளர் பிரிவை அவர் பயன்படுத்தியிருப்பது, தொழிலாளர்களின் சுதந்திரத்தை (திறன்) குறைக்கும் முயற்சியே அன்றி முற்றிலும் இல்லாமல் செய்வதற்கு அல்ல என்று புரிந்துகொள்ளலாம்.

“சுதந்திரமான” தொழிலாளர்களிடமிருந்து இயன்றவரை “திறமையை” குறைப்பதற்காகத் தொழிலாளர் செயல்முறைகளை கட்டமைக்கும் உரிமையுடன் “திறன்” என்பதை வரையறுக்கும் உரிமையையும் முதலாளிகளுக்குக் உறுதியளித்ததன் மூலம் பாபேஜ் இதை நிறைவேற்றினார்.

பாபேஜ் வகுத்தக் கோட்பாடான “வேலைக்கான திறனைக் குறைக்கும்” இது போன்ற நடைமுறைகள், சுதந்திரமாகக் கருதப்படும் ஒன்றைப் பேணுகையில், கட்டுப்பாட்டினால் பெரும் பயன் பெறவும் அதன் விளைவால் ஏற்படும் தீங்குகளையும் நியாயப்படுத்தவும் உதவுகின்றன.

“திறன்” அடிப்படையில் கூலியையும் பணிச் சூழலையும் அமைப்பது ஒரு கட்டமைப்பை உருவாக்குகிறது (தகுதியைப் போன்றது), அதில் ஒரு தொழிலாளியின் ஊதியம், பணிச் சூழல்கள், (இல்லாத) நிறுவனம் ஆகியவை தகுதியானவை என்று குறிப்பிடப்படும் (இதற்கு அவர்கள் தகுதி பெற்றவர்கள்).

அதே வேளையில் தொழிலாளர்கள் தன்னார்வமாக உழைக்கும் தன்மையையும் அவர்களின் நிறுவனங்கள் அதைச் செயல்படுத்துவதையும் (அவர்கள் இதைத் தேர்ந்தெடுத்தனர்) ஒப்பந்தம் உறுதி செய்கிறது. இது இரண்டிற்கும் இடைப்பட்டதாக இருப்பது கறுப்பின சுதந்திரமின்மையின் அச்சுறுத்தலாகும், இதற்கு நேர்மாறாக எப்போதும் “சுதந்திரமானது” என்று கருதப்படும் தொழில்துறை வெள்ளையினத் தொழிலாளருடன் ஒப்பிடும் பொருளாக  விளங்குகின்றது.

குறிப்பு: கட்டுரையின் அடுத்த பகுதி வருகின்ற வெள்ளிக்கிழமை (டிசம்பர் 22) அன்று மின்னம்பலம் தளத்தில் வெளியாகும்.

மொழிபெயர்ப்பாளர்: ஜெயசந்திரன் மாசிலாமணி

ஆசிரியர்: மெரிடித் விட்டேக்கர்

origin stories plantations computers 2

ஆசிரியர் குறிப்பு:

மெரிடித் விட்டேக்கர் நீண்ட காலம் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் ஒரு அறிஞர் ஆவார். அவருடைய பணி பொருளாதார அரசியலும், கணினித் தொழில்நுட்பமும் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களையும் அதைக் கட்டுப்படுத்தும் தொழில்துறையையும் ஆய்வு செய்வதாகும்.

விட்டேக்கர் பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சொல்லாட்சிக் கலையில் இளங்கலைப் பட்டத்தை முடித்தார். அவர் சிக்னல் அறக்கட்டளையின் தலைவராகவும் அவர்களின் இயக்குநர்கள் குழுவிலும் பணியாற்றுகிறார். நவம்பர் 2021 இல், விட்டேக்கர் அமெரிக்க ஃபெடரல் டிரேட் கமிஷனில் செயற்கை நுண்ணறிவுக்கான மூத்த ஆலோசகராக சேர்ந்தார்.

அவர் முன்பு நியூயார்க் பல்கலைக்கழகத்தில் மின்றோ ஆராய்ச்சி பேராசிரியராகவும், அதன் ஏஐ நௌ இன்ஸ்டிட்யூட்டின் துறை இயக்குநராகவும் இருந்தார். அவர் 2006-ல் கூகுளில் சேர்ந்தார். இணைய நடுநிலை அளவீடு, தனியுரிமை, பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவின் சமூக விளைவுகள் ஆகியவை தொடர்பான சிக்கல்களில் ஓப்பன் சோர்ஸ் மற்றும் கல்வியாளர்களுடன் இணைந்து கூகிள் ஓபன் ரீசர்ச்சை நிறுவினார்.

2018 இல் நடந்த உலக உச்சி மாநாட்டில் ஏஐ பற்றி அவர் உரை நிகழ்த்தினார். அவர் அமெரிக்க சிவில் லிபர்டீஸ் யூனியனுக்காக எழுதியுள்ளார். எம்-லேப்பை நிறுவியவர்களுள் விட்டேக்கரும் ஒருவராவார்.

அவர் வெள்ளை மாளிகை, ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன்ஸ், ஃபெடரல் டிரேட் கமிஷன், ஐரோப்பிய பாராளுமன்றம் உள்ளிட்ட பல அரசாங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளுக்கு செயற்கை நுண்ணறிவு, இணையக் கொள்கை, தனியுரிமை, பாதுகாப்பு ஆகியவை குறித்து ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஜூன் 2019 இல் “செயற்கை நுண்ணறிவு: சமூகம் மற்றும் நன்னெறி தாக்கங்கள்” குறித்து யு.எஸ் ஹவுஸ் கமிட்டியின் முன்பும் காங்கிரஸின் முன்பும் விட்டேக்கர் சாட்சியம் அளித்துள்ளார். அவரது சாட்சியத்தில், ஏஐ அமைப்புகள் ஆராய்ச்சியில் சார்பு நிலையும் தீங்கு விளைவிக்கும் வடிவங்களும் பிரதிபலிப்பதை விட்டேக்கர் காட்டினார்.

பாலியல் அத்துமீறல்கள், குடிமக்கள் கண்காணிப்பு தொடர்பாக கூகிளின் கொள்கைகளை எதிர்த்து 2018 ஆம் ஆண்டில் உலகளவில் நடத்தப்பட்ட கூகிள் வெளிநடப்பின் முக்கிய ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக விட்டேக்கர் இருந்தார். கூகிளில் இருந்து அவர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, சக ஊழியர்களிடம் விட்டேக்கர் ஒரு குறிப்பைப் பகிர்ந்து சென்றார்.

அதில் அவர் தொழிநுட்பத் தொழிலாளர்கள் ஒரு அமைப்பாகத் திரள்வதன் அவசியத்தை குறிப்பிட்டிருந்தார். தொழில்நுட்பத்துறையில் பாலியல் துன்புறுத்தல், பாலின சமத்துவமின்மை, இனவெறி ஆகியவற்றை எதிர்த்து சிலிக்கான் பள்ளத்தாக்கில் தொழிலாளர்கள் ஒன்றிணைவதை ஊக்குவித்தவர் விட்டேக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்… 

தோட்டத் தொழிலாளர்கள் தொழில்துறை அடிமைகளாக மாறியது எப்படி? – பாகம் 1!

எதை நோக்கிச் செல்கிறது இஸ்ரேலிய-பாலஸ்தீனப் போர்?

origin stories plantations computers 2

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *