தோட்டத் தொழிலாளர்கள் தொழில்துறை அடிமைகளாக மாறியது எப்படி? – பாகம் 1!

Published On:

| By Manjula

origin stories plantations computers

நோக்கம் origin stories plantations computers

தமிழ் ஊடக வரலாற்றில் ஒரு புதிய முயற்சியாக, உலக அரங்கில் வெளியாகும் சிறப்புக் கட்டுரைகளை தமிழ் உலகில் அறிமுகம் செய்யும் நோக்கத்தில், மின்னம்பலம் இணையதளம் மற்றும் அமெரிக்காவின் பெருமைமிகு கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ’லாஜிக்ஸ்’ பத்திரிக்கை இணைந்து வழங்கும், உலகப்புகழ்பெற்ற சிக்னல் (Signal) செயலியின் தலைவர் மெரிடித் விட்டேக்கர் எழுதும் சிறப்புத் தொடர் இது.

தோட்ட தொழிலாளர்களின் அவலங்களையும், தொழிற்துறையின் மற்றொரு பரிமாணம் மற்றும் அதன் வரலாற்றையும் ஆழமாக எடுத்துரைக்கும் இத்தொடரை, புது முயற்சிகளை புத்துணர்ச்சியுடன் தொடரும் நம்முடைய மின்னம்பலம் இணையதளத்தில் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.

முன்னுரை 

ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர்களைக் கண்டித்தவரும், ஜனநாயகமும், முதலாளித்துவமும் ஒத்துப்போகாது என்ற கருத்து கொண்டிருந்தவரும், வளர்ந்து வரும் தொழில்துறை முதலாளித்துவ வர்க்கத்தின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்தவருமான சார்லஸ் பாபேஜ் நவீன டிஜிட்டல் கம்ப்யூட்டிங்கிற்கான மூலப்படிவத்தின் இணை வடிவமைப்பாளர் ஆவார்.

பாபேஜின் வரலாறு அந்தந்த காலகட்டத்திற்கு தக்கவாறு துல்லியமாக வேறுபடுகிறது. ‘வளர்ந்து வரும் முதலாளிகள்’ தொழிலாளர்களை எந்தெந்த முறையில் அடிபணியச் செய்ய முடியும்? என்பது பற்றிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அவரது கோட்பாடுகள் கன்வென்ஷனல் லேபர் ஸ்காலர்ஷிப்பில் தெளிவாக ஆவணப்படுத்தப்பட்டு உள்ளன.

இருப்பினும், 19-ம் நூற்றாண்டில் டிஜிட்டல் கம்ப்யூட்டிங்கிற்கான ஆரம்ப கட்ட பணிகளில் கணிதவியலாளர் அடா லவ்லேஸுடன் இணைந்து பங்களித்தது போன்ற பல முக்கியத்துவம் வாய்ந்த அவரது பணிகளில் இவை இல்லை என்பது விந்தையான ஒன்றாகும்.

  •  இந்த வரலாறுகளை ஒன்றாக படிக்கும் போது, தொழிலாளர்களை எவ்வாறு ஒழுக்கமானவர்களாக மாற்றலாம்? என்பதற்கு பாபேஜ் வரையறுத்த முன் மாதிரியான யோசனைகளும் அவர் தனது வாழ்நாள் முழுதும் முயற்சி செய்து உருவாக்கிய கணக்கிடும் இயந்திரங்களும், பிரித்துப் பார்க்க முடியாத வகையில் இணையானதாக இருப்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். நவீன கணினிகள் அனைத்தும் எந்த கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளனவோ?
  • அதேபோல தொடக்கத்திலிருந்தே எந்திரமயமாக்குவதற்கும், தொழிலாளர்களை ஒழுங்குபடுத்துவதற்குமான கருவிகளாக இந்த இயந்திரங்கள் உருவாக்கப்பட்டன.

அதன் கட்டமைப்புகள், பொருளாதார நிபுணர் ஆடம் ஸ்மித்தின் தியரி ஆஃப் லேபர் டிவிஷனை நேரடியாக குறியாக்கம் செய்ததுடன் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள தொழிலாளர்களை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்களில் உள்ள முக்கிய செயல்பாடுகளையும் எடுத்துக் கொண்டது.

இயந்திரங்கள் பணியைக் கட்டுப்படுத்துவதற்கும், தானியக்கமாக்குவதற்கும், உடல்ரீதியான பணியை அல்லாமல் மன ரீதியான பணியாய் ஒழுங்கு படுத்துவதற்குமான கருவிகளாக இருந்தன.

அடிமை முறை ஒழிப்பு origin stories plantations computers

3. இந்த இயந்திரங்களை வடிவமைப்பதற்கான கோட்பாடுகளை பாபேஜும், ஸ்மித்தும் கண்டுபிடிக்கவில்லை. தோட்டத்தில் அடிமைப்படுத்தப்பட்ட மக்களை கட்டுப்படுத்துவதற்காக முதலில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்களான அவை முன்மாதிரியாக இருந்தன.

தொழிலாளர்களை கண்காணிப்பது, பணியிட எந்திரமயமாக்கல் மற்றும் பாரம்பரியமாக செய்யும் வேலைகளை ‘கிக் ஒர்க்’ என கணினி மூலமாக மறுகட்டமைப்பது போன்ற நிகழ்காலத்தில் உயிர்ப்புடன் இருக்கும் சிக்கல்கள், 19-ம் நூற்றாண்டின் முற்பகுதியில், ‘அடிமை முறை ஒழிப்பு காலத்தில்’ கட்டுப்படுத்தும் முறையாக கணினி மயமாக்கல் சிந்தனை வரலாற்று ரீதியாக எழுச்சி பெற்ற விதத்தை எதிரொலிக்கிறது.

1833-ல் பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக மேற்கிந்திய அடிமைத்தனத்தை ஒழித்தது. மேலும் அடிமை முறை ஒழிப்பு மீதான விவாதம் பற்றி பாபேஜ் நன்கு அறிந்திருந்தார். அடிமைப்படுத்தப்பட்ட கறுப்பினத் தொழிலாளர்களுக்கு மாற்று வழிகளைத் தேடுகையில் உயர் அடுக்கின் பிரிட்டிஷாரை உலுக்கிய கேள்விகளையும் அவர் அறிந்திருந்தார்.

குறிப்பாக பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை பராமரிப்பதற்குத் தேவையான வேகத்திற்கு, தொழில்மயமாக்கலுக்கு எதிராக தொடர்ந்து கிளர்ச்சி செய்யும் வெள்ளை தொழில்துறை தொழிலாளர்கள் உற்பத்தி செய்வதற்கு அவர்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது? என்ற கேள்வி பிரிட்டிஷாரை உலுக்கியது.

தாக்கத்தை ஏற்படுத்திய பாபேஜின் தொழிலாளர் கோட்பாடுகள், அவரது இயந்திரங்கள் ஆகிய இரண்டையும் இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் முயற்சிகளாக நாம் புரிந்து கொள்ளலாம். அவை தெரிந்தோ, தெரியாமலோ தோட்டத்தில் உருவாக்கப்பட்ட கட்டுப்பாட்டுத் தொழில்நுட்பங்களுக்கு புத்துயிர் அளித்தன.

தொழில்துறை தொழிலாளர் கட்டுப்பாட்டை தோட்டத்தில் கண்டறிதல்

சட்டம் மற்றும் தொழிலாளர் கொள்கையில், சுதந்திரம் என்ற கருத்து பெரும்பாலும் ஒப்பந்தத்தில் வேரூன்றியிருக்கிறது. வருவதற்கும், போவதற்கும், விதிமுறைகளை ஏற்றுக் கொள்வதற்கும், மீறுவதற்கும் மக்களுக்கான அதிகாரம் (அதிகாரமின்மை) சட்டம் மற்றும் உச்சபட்சமாக அரச வன்முறையின் துணையோடு எழுத்துப்பூர்வமாக வரையறுக்கப்பட்டுள்ளது.

4. இதன்படி தொழிலாளர்களும், முதலாளிகளும் ஒப்பந்தத்தின் விதிமுறைகளை ஏற்கவும் அல்லது மறுக்கவும் சுதந்திரமுள்ளவர்கள் என்ற வகையில் ஒப்பந்தத்தை சமமாக அணுக வேண்டும் எனப் புரிந்து கொள்ளப்படுகிறது. இருப்பினும், பெறப்பட்ட இந்த சுதந்திரமானது உற்பத்தித்திறனை இயன்றளவிற்கு பிழிந்தெடுக்கும் முதலாளிகளின் இலக்குகளை அடைவதற்காக வடிவமைக்கப்பட்ட தொழிலாளர் கட்டுப்பாட்டுத் தொழில்நுட்பங்களால் அமலாக்கப்படும் அதிகார கட்டமைப்பு பேதங்களால் நடைமுறையில் குறைக்கப்படுகிறது.

இந்த தொழில்நுட்பங்கள் தொழிலாளர்களின் உடல்களையும், இயக்கங்களையும், மனப்பழக்கங்களையும் கட்டுப்படுத்துகின்றன. மேலும் அவற்றைச் செயல்படுத்துவது ‘சுதந்திரமான’ என்று சொல்லக்கூடிய தொழிலாளர் பரிபாலனைகளை இயலச் செய்யும். அதே வேளையில் தொழிலாளர்களின் முகமையையும், பணியிடத்தில் குரல் கொடுப்பதையும் கட்டுப்படுத்துகிறது. அதற்காக, தொழிலாளர்கள் அத்தகைய நிபந்தனைகளை சுதந்திரமாகத் தேர்ந்தெடுத்ததற்கான ஆதாரமாக ஒப்பந்தத்தைக் காட்டுகிறது.

தொழிலாளர்களை கட்டுப்படுத்துவதற்கான தொழில்துறை முறைகள் தோட்டங்களில் முன்னரே தோன்றின. இது அடிமைப்படுத்தப்பட்ட கறுப்பின மக்களின் உழைப்பை அதிகரிப்பதற்கு பயன்பட்டது. அத்தகைய கட்டுப்பாடுகள் இல்லாமல் தங்களை அடிமைப்படுத்தியவர்களுக்கு லாபம் பெற்றுத் தருவதற்கு எந்த விதமான உந்துதலும் இல்லாமல் இருந்தார்கள்.

தொழில்துறை மற்றும் தோட்டத் தொழிலாளர் கட்டுப்பாட்டுக்கு இடையிலான தொடர்பு அடிப்படையானதாக இருக்கும். அதே வேளையில், இன வெறியில் வன்முறையைக் கட்டவிழ்த்து தொழிலாளர்களைக் கட்டுப்படுத்திய தோட்ட அடிமை முறைகளுக்கும், அதனை அடிப்படையாகக் கொண்டு தொழில்நுட்பங்கள் மூலம் உருவாக்கப்பட்ட தொழில்துறை தொழிலாளர் செயல்முறைகளுக்கும் இடையில் சாதாரண ஒற்றுமைகள் இல்லை என்பதை அறிந்து கொள்வது அவசியமானதாகும்.

origin stories plantations computers

கொத்தடிமை நிலைமைகள்

5. ஆதிக்க மனப்பான்மையில் கட்டமைக்கப்பட்ட தோட்டத்தில் தோட்ட மேலாண்மை கறுப்பின மக்களை மனிதர்களாக பார்க்காமல், பண்டங்களாக பார்ப்பதில் உறுதியுடன் இருந்தது. அத்துடன், வெள்ளைத் தொழிலாளர்கள் ‘சுதந்திரமானவர்கள்’ என்று வகைப்படுத்த கூடியதற்கு மாறாக தோட்டத்தில் நிலவிய கொத்தடிமை நிலைமைகள் ‘அடிமைகள்’ என்ற வகையை வரையறுத்தது.

அடிமை முறையில் உருவாக்கப்பட்ட கட்டுப்பாட்டு முறைகளை ஒப்பந்தப்படி நிர்வகிக்கப்படும் ‘சுதந்திரமான’ வெள்ளைத் தொழிலாளர் முறைக்கு மாற்றுவதற்கு தோட்ட அடிமை முறை மற்றும் தொழில்துறை, தொழிற்சாலைகள் கட்டமைப்புக்கு இடையிலான ஒற்றுமைகள் உதவியாக இருந்தது.

நவீன மயமான திறன்மிக்க தொழிற்சாலைகள் போல 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மேற்கிந்திய தீவுகளில் உள்ள பிரிட்டிஷ் தோட்டங்களில் ‘கடுமையாக’ உழைக்கும் சூழல் இல்லை. மாறாக, தோட்டங்கள் ‘நவீன தொழில்துறை நிறுவனங்கள்’ ஆகும்.

6. அதன் உரிமையாளர்களும், மேற்பார்வையாளர்களும் பல ‘நவீன’ தொழில்துறை மேலாண்மையையும், தொழிலாளர் ஒழுங்கு முறைகளையும் தொழிற்சாலைகளில் அதே அளவிற்கு கடுமையாக செயல்படுத்தப்படுவதற்கு முன்பே உருவாக்கியுள்ளனர்.

தொழில்துறை மேலாண்மை

7 புதிய தொழில்துறை ஒழுங்குமுறையின் சாரங்கள் பெரும்பாலானவை தோட்டத்து அடிமை முறைகள் பலவற்றுடன் ஒத்துப்போவதாக இருந்தன. மையப்படுத்தப்பட்ட கண்காணிப்பு, கட்டுக்கோப்பான பிரிவுகள், தொழிலாளர் பிரிவு, கண்டிப்பாக கட்டுப்படுத்தப்பட்ட வேலை வேகம், எழுதப்பட்ட விதிகளும், ஒழுங்குமுறைகளும் அனைத்தும் ஒவ்வொரு தோட்டக்காரராலும் பின்பற்றப்படும் நடைமுறையாகும்.

8. பிரிட்டிஷ் தொழிலதிபர்கள் தெரிந்தே அடிமை முறையிலிருந்த நடைமுறைகளை எடுத்துக் கொண்டார்கள். தோட்ட நிர்வாக வழிகாட்டிகள், பிரிட்டிஷ் முதலாளிகளிடையே பகிரப்படுவது வாடிக்கையாக இருந்தது. மேலும் 18 மற்றும் 19-ம் நூற்றாண்டுகளில் பிரிட்டனில் முன்வடிவமைக்கப்பட்ட கணக்கியல் புத்தகங்கள், வார்ப்புருக்கள் மற்றும் கையேடுகள் தயாரிக்கும் தொழில் பரவலாக இருந்தது. இது பெரும்பாலும் தொழில்துறை மேலாண்மை பற்றிய இலக்கியங்களுடன் இணைந்திருந்தன.

9. இந்த தொடர்புகள் தெளிவாக இருந்த போதிலும், வேலை மற்றும் தொழிலாளர்களின் வரலாறும் இவற்றுடன் மேலாண்மை, வணிகம் ஆகியவை பற்றிய புலமையும் நிர்வாகம் மற்றும் தொழிலாளர் செயல்முறைகளின் நவீன வடிவங்களை வடிவமைப்பதில் அடிமை முறையின் முக்கியத்துவத்தை முழுவதுமாக அழிக்கிறது.

தொழில்துறை தொழிற்சாலையின் தொடர்புடன் தோட்டத்தை ஈடுபடுத்த மறுப்பதன் காரணமாக வேலையும், தொழில்மயமாக்கலின் வரலாறும் இன ஆதிக்கத்தின் நடைமுறைகளிலிருந்து பிரிக்கப்பட்டதாக ஒரு தோற்றத்தை உண்டாக்குகிறது.

origin stories plantations computers

தொழில்துறை இயந்திரங்களின் வளர்ச்சி

கதையில் உள்ள இந்த உத்தி போதாமைகள் சில வகையான கூலித்தொழில்களை கட்டுப்படுத்துவதற்கு தோட்டத் தொழில்நுட்பங்களை அணி திரட்டும் அதே வேளையில் ‘சுதந்திரமானவை’ என்று வகைப்படுத்தும் திட்டத்திற்கு பயனளிக்கிறது.

தொழிலாளர் வரலாறுகளும், தொழிலாளர் கட்டுப்பாட்டின் தொழில்நுட்பங்களும் தோட்டங்களில் தோன்றியதிலிருந்து துண்டிக்கப்படுவது, வேலையின் தன்மையையும், இனத்துடனான அதன் தொடர்பையும் சுற்றியுள்ள சமகால இக்கட்டான சூழ்நிலைகளை அடையாளம் காணும் நமது திறனைக் குறைக்கிறது.

அப்படி மாற்றியமைத்ததால், 18 மற்றும் 19-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழில்துறை இயந்திரங்களின் வளர்ச்சி தான் தொழில் மயமாக்கலுக்குக் காரணம் என்பதாகத் திரித்து காட்டுகிறது.

முன்னர் தொழில்மயமாக்கலுக்கு தொழில்நுட்ப வளர்ச்சி வலுவாக உதவிய போது (இதற்கு பாபேஜ் கணிசமான பங்களிப்பை வழங்கினார்), அத்தகைய இயந்திரங்கள் தவிர்க்க முடியாமல் தொழிற்சாலைக்கு முந்தைய தோட்டத் தொழிலாளர் ஒழுக்கத்தின் தர்க்கங்களுடன் பிணைக்கப்பட்டன.

இனத்தையும், உழைப்பையும் புறக்கணிப்பதன் மூலம் திரிக்கப்பட்ட இந்த வரலாறுகள் தொழிற்சாலை மற்றும் அதன் ‘சுதந்திரமான’ தொழிலாளர் முறைகள் விஞ்ஞான முன்னேற்றத்தின் விளைவாக உருவானதாகவும், ஒழுக்கத்திற்கான தோட்ட முறைகளுடன் அதற்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் சித்தரிக்கின்றன.

குறிப்பு: கட்டுரையின் அடுத்த பகுதி வருகின்ற புதன்கிழமை (டிசம்பர் 20) அன்று மின்னம்பலம் தளத்தில் வெளியாகும்.

மொழிபெயர்ப்பாளர்: ஜெயசந்திரன் மாசிலாமணி

ஆசிரியர்: மெரிடித் விட்டேக்கர் 

origin stories plantations computers

ஆசிரியர் குறிப்பு:

மெரிடித் விட்டேக்கர் நீண்ட காலம் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் ஒரு அறிஞர் ஆவார். அவருடைய பணி பொருளாதார அரசியலும், கணினித் தொழில்நுட்பமும் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களையும் அதைக் கட்டுப்படுத்தும் தொழில்துறையையும் ஆய்வு செய்வதாகும். விட்டேக்கர் பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சொல்லாட்சிக் கலையில் இளங்கலைப் பட்டத்தை முடித்தார். அவர் சிக்னல் அறக்கட்டளையின் தலைவராகவும் அவர்களின் இயக்குநர்கள் குழுவிலும் பணியாற்றுகிறார். நவம்பர் 2021 இல், விட்டேக்கர் அமெரிக்க ஃபெடரல் டிரேட் கமிஷனில் செயற்கை நுண்ணறிவுக்கான மூத்த ஆலோசகராக சேர்ந்தார்.

அவர் முன்பு நியூயார்க் பல்கலைக்கழகத்தில் மின்றோ ஆராய்ச்சி பேராசிரியராகவும், அதன் ஏஐ நௌ இன்ஸ்டிட்யூட்டின் துறை இயக்குநராகவும் இருந்தார். அவர் 2006ல் கூகுளில் சேர்ந்தார். இணைய நடுநிலை அளவீடு, தனியுரிமை, பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவின் சமூக விளைவுகள் ஆகியவை தொடர்பான சிக்கல்களில் ஓப்பன் சோர்ஸ் மற்றும் கல்வியாளர்களுடன் இணைந்து கூகிள் ஓபன் ரீசர்ச்சை நிறுவினார். 2018 இல் நடந்த உலக உச்சி மாநாட்டில் ஏஐ பற்றி அவர் உரை நிகழ்த்தினார். அவர் அமெரிக்க சிவில் லிபர்டீஸ் யூனியனுக்காக எழுதியுள்ளார். எம்-லேப்பை நிறுவியவர்களுள் விட்டேக்கரும் ஒருவராவார்.

அவர் வெள்ளை மாளிகை, ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன்ஸ், ஃபெடரல் டிரேட் கமிஷன், ஐரோப்பிய பாராளுமன்றம் உள்ளிட்ட பல அரசாங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளுக்கு செயற்கை நுண்ணறிவு, இணையக் கொள்கை, தனியுரிமை, பாதுகாப்பு ஆகியவை குறித்து ஆலோசனை வழங்கியுள்ளார். ஜூன் 2019 இல் “செயற்கை நுண்ணறிவு: சமூகம் மற்றும் நன்னெறி தாக்கங்கள்” குறித்து யு.எஸ் ஹவுஸ் கமிட்டியின் முன்பும் காங்கிரஸின் முன்பும் விட்டேக்கர் சாட்சியம் அளித்துள்ளார். அவரது சாட்சியத்தில், ஏஐ அமைப்புகள் ஆராய்ச்சியில் சார்பு நிலையும் தீங்கு விளைவிக்கும் வடிவங்களும் பிரதிபலிப்பதை விட்டேக்கர் காட்டினார்.

பாலியல் அத்துமீறல்கள், குடிமக்கள் கண்காணிப்பு தொடர்பாக கூகிளின் கொள்கைகளை எதிர்த்து 2018 ஆம் ஆண்டில் உலகளவில் நடத்தப்பட்ட கூகிள் வெளிநடப்பின் முக்கிய ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக விட்டேக்கர் இருந்தார். கூகிளில் இருந்து அவர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, சக ஊழியர்களிடம் விட்டேக்கர் ஒரு குறிப்பைப் பகிர்ந்து சென்றார். அதில் அவர் தொழிநுட்பத் தொழிலாளர்கள் ஒரு அமைப்பாகத் திரள்வதன் அவசியத்தை குறிப்பிட்டிருந்தார். தொழில்நுட்பத்துறையில் பாலியல் துன்புறுத்தல், பாலின சமத்துவமின்மை, இனவெறி ஆகியவற்றை எதிர்த்து சிலிக்கான் பள்ளத்தாக்கில் தொழிலாளர்கள் ஒன்றிணைவதை ஊக்குவித்தவர் விட்டேக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

உதயசூரியன் நாடு : நாட்டு சரக்கு… நச்னு இருக்கு – ஜப்பான் பயணப் பதிவுகள் 7

நாடாளுமன்றத்தில் வெளிப்படும் நாட்டு மக்கள் சீற்றம்!

origin stories plantations computers

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel