ஒழுக்கத்தின் நிழலில் அவதூறு: இந்திய பெற்றோர்களை சாடும் யுனிசெஃப்!

entertainment

குழந்தைகளை ஒழுங்குபடுத்தும் முயற்சி என்ற பெயரில் குழந்தைகள் மீது இந்திய பெற்றோர்கள் 30 வகையான உடல் மற்றும் வாய்மொழி அவதூறுகளை பயன்படுத்துவதாக யுனிசெஃப் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ‘பெற்றோருக்குரிய விஷயங்கள்: பெற்றோரின் அணுகுமுறைகள் மற்றும் நடைமுறைகளை ஆய்வு செய்தல்’ என்ற ஆய்வு யுனிசெஃப் மூலம் நடத்தப்பட்டது. இதில், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ஒடிசாவில் தலா இரண்டு மாவட்டங்களிலும், ராஜஸ்தானில் மூன்று மாவட்டங்களிலும், மகாராஷ்டிராவின் நான்கு மாவட்டங்களிலும் ஆய்வு மேற்கோள்ளப்பட்டது. இதன் மூலம், தண்டனை என்பது குழந்தைகளை ஒழுங்குபடுத்துவதற்கான பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட முறையாக இருக்கிறதென்று யுனிசெஃப் கருத்து தெரிவித்துள்ளது.

நேற்று(ஜூன் 3) இந்த அறிக்கையின் வெளியீட்டில் பேசிய இந்தியாவின் யுனிசெஃப் பிரதிநிதியான யாஸ்மின் அலி ஹக், “குழந்தைகளுக்கு எதிரான பல்வேறு வகையான வன்முறைகளில் உடல் ரீதியான வன்முறை (சூடுவைத்தல்; கிள்ளுதல்; அறைதல்; குச்சி, பெல்ட்கள், தண்டுகள் போன்ற சாதனங்களால் அடிப்பது) வாய்மொழி துஷ்பிரயோகம் (குற்றம் சாட்டுதல்) ; விமர்சித்தல்; கூச்சலிடுதல்; தவறான மொழியைப் பயன்படுத்துதல்; உடல் ரீதியான வன்முறைகளைக் கண்டறிதல் மற்றும் உணர்ச்சி ரீதியான அவமதிப்பு (இயக்கத்தை கட்டுப்படுத்துதல்; உணவை மறுப்பது; பாகுபாடு காட்டுதல்; பயத்தைத் தூண்டுவது) உள்ளிட்ட 30 வகைகள் இதில் அடங்கியுள்ளது” என்று அவர் விவரித்தார். அத்துடன், “எபோலா நெருக்கடி போன்ற தொற்றுநோய்களின் போது, குடும்பங்கள் சமாளிக்க போராடுகையில், சிறு குழந்தைகள் வன்முறை, துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்பு ஆகியவற்றை அனுபவிக்க அதிக வாய்ப்புள்ளது என்பதை எங்கள் அனுபவம் காட்டுகிறது. இந்த தொற்றுநோய் காலத்தில் அவர்களுக்கு ஏற்படும் இந்த குடும்ப வன்முறை வாழ்நாள் முழுவதும் அவர்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று அவர் கவலை தெரிவித்தார்.

இந்த கொரோனா தொற்று காலத்தை குறிப்பிட்டு பேசிய யுனிசெஃப், குழந்தைகள் பாதுகாப்பு சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக நியமிக்க வேண்டிய உடனடி தேவை உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளது. பாதுக்காப்பு சேவைகளில் முக்கியமாக – உடல்நலம் மற்றும் சமூக நலன், குழந்தைகள் பாதுகாப்பு சேவைகள், மனநலம் மற்றும் உளவியல் ஆதரவு, மாற்று பராமரிப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவை இருக்க வேண்டும் என மேற்கோள் காட்டியுள்ளது. யாஸ்மின் அலி ஹக் கூறும்போது, “இந்த சேவைகள் குழந்தைகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் உட்பட அனைவருக்கும் கிடைக்க வேண்டும், பெற்றோர் இல்லாதவர்கள், மிகவும் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்,” என்று அவர் விளக்கினார்.

“சிறுமிகளும் சிறுவர்களும் மிகச் சிறிய வயதிலிருந்தே மிகவும் வித்தியாசமாக வளர்க்கப்படுகிறார்கள் என்பதையும் காட்டும் ஆய்வு வீட்டு வேலைகளின் சுமை, அன்றாட கட்டுப்பாடுகள் ஆகியவை சிறுமிகள் மீது அதிக அளவு திணிக்கப்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளது. குழந்தைகளுக்கு தாய்மார்கள் முக்கிய பராமரிப்பாளர்களாக இருக்கிறார்கள். அதே நேரத்தில் தந்தைகள் மிகவும் குறைவாகவே ஈடுபடுகிறார்கள். இருப்பினும், ஆய்வில் பல சந்தர்ப்பங்களில் அவர்கள் ஈடுபட விரும்புகிறார்கள். ஆனால் எப்படி என்று அவர்களுக்கு தெரியவில்லை” என்கிறார் யாஸ்மின் அலி ஹக்.

மகாராஷ்டிரா, ஒடிசா, சத்தீஸ்கர், அசாம், ராஜஸ்தான் மற்றும் உ.பி. போன்ற மாநிலங்களில் நடைபெற்ற இந்த பெற்றோருக்கான திட்டங்களை அம்மாநிலங்கள் செயல்படுத்துவதில் கண்டறிந்தது இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களும் இதை பின்பற்றலாம் என யுனிசெஃப் பரிந்துரைத்துள்ளது. மேலும், கதைசொல்லல், பாடுதல் மற்றும் குழந்தையுடன் விளையாடுவதன் மூலம் பெற்றோரின் அக்கறை அதிகளவில் குழந்தைகள் மீது ஈடுபட வழிவகுத்திருக்கிறது. இது குறித்து குறிப்பிடும் யுனிசெஃப், “இவை அனைத்தும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு முக்கியமானவை” என குறிப்பிட்டுள்ளது.

**-முகேஷ் சுப்ரமணியம்**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *