iஜேசிபி வாகனம் ஓட்டும் ஆறு வயது சிறுவன்!

entertainment

டிராக்டர், கண்டெய்னர் லாரி, ரோடு ரோலர், ஜேசிபி போன்ற கனரக வாகனங்கள் ஆண்களுக்கானவை, அவற்றை ஆண்கள் தான் ஓட்ட முடியும் என்ற எண்ணம் நம்மில் பலருக்கும் இருக்கும்.

இவற்றை இயக்குவதற்கு அதிக கவனமும், சற்று வலிமையும் தேவை தான் என்றாலும் அது உடல் வலிமை சார்ந்தது அல்லது மன வலிமையை அடிப்படையாகக் கொண்டது என்பது தான் உண்மை. பெரும்பாலான பெண்கள் இவற்றை இயக்க கற்றுக்கொள்வதற்கு முன் வருவது கிடையாது.

எனவே தான் இவை ஆண்களுக்கானதாக மட்டும் ஒதுங்கி விட்டது. ஆனால் பெண்களால் மட்டுமல்ல சிறு குழந்தையாலும் கூட இது போன்ற வாகனங்களை இயக்க முடியும் என்று உணர்த்தி இருக்கிறார் ஒன்றாம் வகுப்பில் படிக்கும் ராஜேஷ் என்னும் சிறுவன்.

JCB ko khudaai karte dekh,aap bhi bahut ruke honge, bheed banayi.hogi.
But isse behtar kuch mahi dukha abhi tak.
Talent + self- belief.
If you think you can or you cannot, you are right.
Wouldn’t advice anyone to try this at a young age, but just can’t stop applauding. pic.twitter.com/1MjkUL405R

— Virender Sehwag (@virendersehwag) June 27, 2020

அந்த குழந்தை ஜேசிபி வாகனத்தை இயக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. உன் பெயர் என்ன, எந்த வகுப்பில் படிக்கிறாய் என்ற கேள்விகளுக்கு முகத்தை மறைத்து வெட்கப்பட்டுக் கொண்டே பதில் சொல்லும் அந்த குழந்தை, சீட்டில் கால் கூட எட்டாத அந்த ஜேசிபி வாகனத்தில் ஏறி அமர்ந்து சிரமப்பட்டு அதன் கதவை மூடுகிறார்.

தொடர்ந்து நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வாகனத்தின் இரு பிரேக்குகளையும், இரு புறமும் உள்ள நீளமான கைகளையும் ஒரே நேரத்தில் கவனித்துக் கொண்டே சாதாரணமாக அந்த ஜேசிபியை அவர் இயக்குகிறார். இந்த வீடியோவைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த கிரிக்கெட் வீரர் சேவாக் தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ ஏராளமான லைக்குகளைப் பெற்றுவருகிறது. சிறுவன் ராஜேஷுக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *