பிரபலங்களின் விவாகரத்து: ராம் கோபால் வர்மா கருத்து!

Published On:

| By Balaji

t

நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா ரஜினியை பிரிவதாக நேற்று முன்தினம் அறிவித்ததில் இருந்து சமூக வலைத்தளங்களில் இதற்கு என்ன காரணம் என்ற பல தகவல்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

இந்த நேரத்தில் இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது பங்குக்கு பொதுவாக திருமணம் மற்றும் விவாகரத்து குறித்து தனது டிவிட்டரில் சில கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார். அதில், ”பிரபலங்களின் விவாகரத்துகள் திருமணத்தின் ஆபத்துகள் குறித்து இளைஞர்களை எச்சரிப்பதற்கான நல்ல ட்ரெண்ட் செட்டர்களாக இருக்கின்றன. திருமணத்தைவிட எதுவும் காதலை விரைவாகக் கொல்வதில்லை. காதல் நீடித்திருக்கும்வரை காதலிப்பதே மகிழ்ச்சிக்கான ரகசியம். அதன் பிறகு திருமணம் என்னும் சிறைக்குள் சிக்காமல் கடந்து போய்விட வேண்டும்.

திருமணத்தில் உள்ள காதல், அவர்கள் அந்தக் காதலைக் கொண்டாடும் நாட்களைவிடக் குறைந்த நாட்களே நீடிக்கும். அதாவது 3 முதல் 5 நாட்கள் மட்டுமே. புத்திசாலிகள் காதலிக்கிறார்கள். முட்டாள்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள். விவாகரத்துகள் தான் விஷேச நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட வேண்டும். காரணம் அதில் இருக்கும் விடுதலை. இருவரது ஆபத்தான குணாதிசயங்களைப் பரிசோதிப்பதால் திருமணங்கள் மிகவும் அமைதியாக நடத்தப்பட வேண்டும். மகிழ்ச்சியின்மை மற்றும் சோகம் ஆகியவற்றின் தொடர்ச்சியை அறிவிப்பதில் நம்முடைய மோசமான முன்னோர்களால் சமூகத்தில் திணிக்கப்பட்ட மிகவும் மோசமான சடங்குதான் திருமணம்” என்று பதிவிட்டுள்ளார்.

**இராமானுஜம்**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share