lஇரு கால்களும் இன்றி சாதனையும், சாகசமும்!

entertainment

ஒரு குறிப்பிட்ட லட்சியத்தை நோக்கிய நமது வாழ்க்கை பயணத்தில் தடங்கல்கள் வரும் பொழுது நாம் சோர்ந்து போவது உண்டு.

பலரும் தன்னம்பிக்கையுடன் தோல்விகளில் இருந்து மீண்டு, ஆரம்பப் புள்ளியில் இருந்து லட்சிய பயணத்தை மீண்டும் தொடங்குகின்றனர். ஆனால் சிலருக்கு அந்தத் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.

‘ஏன் எனது வாழ்க்கை இப்படி இருக்கிறது?’, ‘ஏன் என்னால் மட்டும் எதுவும் முடியவில்லை?’ என்று துவங்கி ‘எனக்கு வாழவே பிடிக்கவில்லை’ என்பதாக பலரும் விரக்தியில் பேசுவதைப் பார்த்திருப்போம்.

‘அது மட்டும் இருந்திருந்தால் என்னாலும் சாதிக்க முடிந்திருக்கும்’ என்று இல்லாமல் போன வசதியையும், வாய்ப்பையும் காரணம் காட்டி பலரும் சோர்ந்து போவது உண்டு. அவ்வாறு மன சோர்வு அடையும் நமக்கு மிகப்பெரிய ஒரு பாடத்தைக் கற்றுத் தந்துள்ளார் டிக் டாக் திறமையாளர் ஒருவர்.

@dev.mishra_ak47

Sab kuchh badal Gaya Mera ❤️🤗##tiktokindia_ ##newstory ##foryoupage

♬ Qismat – Ammy Virk

இல்லாமல் போனதைப் பற்றி கவலைப்பட கூடாது என்றும் சாதனைகள் புரிவதற்கு ஊனம் ஒரு தடை அல்ல என்றும் தனது வீடியோக்கள் மூலம் அவர் உணர்த்தி வருகிறார்.

@dev.mishra_ak47

1 and half years old video 😲😱##tiktokindia_ ##foryoupage

♬ original sound – ali_nakhuda

இரு கால்களையும் இழந்த அவர் மன உறுதியின் துணையுடன் பல்வேறு சாகசங்களையும் நிகழ்த்தி வருகிறார். தேவ் மிஷ்ரா என்னும் டிக் டாக் பக்கத்தில் அவர் தொடர்ந்து வெளியிட்டு வரும் வீடியோக்கள் அனைவரையும் கவர்ந்து வருகிறது. அதிக எடை கொண்ட ஒரு நபரை இரு கைகளால் மட்டும் தூக்கிப் பிடித்தும், கம்பிகளின் மீது ஏறி நின்று சாகசம் புரிந்தும் அவர் அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.

@dev.mishra_ak47

Jai Hind,,❤️🇮🇳🙏 ##india ##hindustan ##jindabad ##tiktokindia_ ##indianstory ##foryoupage

♬ original sound – indianarmyindianarmy1

இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமானவர்களால் பின் தொடரப்பட்டு வரும் அவரது டிக் டாக் பக்கம் 70 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளையும் அள்ளிக் குவித்துள்ளது.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *