கார்ப்பரேட் நிறுவனங்கள் தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுடன் இணைந்து முதலீடு செய்வது அதிகரிக்க தொடங்கியுள்ளது.
சொந்த பணத்தில் படம் தயாரிப்பது, பற்றாக்குறைக்கு பைனான்ஸ் வாங்குவது என்கிற நடைமுறை முற்றிலுமாக இல்லாமல் போனது. நடிகர்களுக்கு அட்வான்ஸ் கொடுத்து கால்ஷீட்டை உறுதிப்படுத்தவே பைனான்சியர் உதவி தேவைப்படுகிறது.
இந்தச் சூழலை கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்த தொடங்கி இருக்கிறது. நடிகர்களிடம் கால்ஷீட் வாங்க கூடிய தயாரிப்பாளர்களுடன் இணைந்து படத்தயாரிப்புக்குத் தேவையான நிதியுதவியை செய்வதன் மூலம் படத்தின் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமைகளைப் போட்டியில்லாமல் கைப்பற்ற முடிகிறது.
அதன் விளைவாகவே நேர் கொண்ட பார்வை, வலிமை இரண்டு படங்களையும் ஜீ தமிழ் கைப்பற்ற முடிந்தது. இதே போன்று தெலுங்கில் நாகார்ஜுனா நடிக்கும் 100ஆவது படத்தை அன்னபூர்ணா ஸ்டூடியோஸ் உடன் இணைந்து ஜீ ஸ்டூடியோஸ் தயாரிக்க உள்ளது
மோகன் லால் நடிப்பில் வெளியான லூசிபர் மலையாளப் படத்தின் தெலுங்கு பதிப்பில் சிரஞ்சீவி நடித்து வருகிறார்.
இந்தப் படத்தை இயக்குநர் மோகன்ராஜா இயக்கி வருகிறார் . நாகார்ஜுனா நடிக்கும் 100ஆவது படத்தையும் அவரே இயக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
**-இராமானுஜம்**
{நாகார்ஜுனாவின் 100ஆவது படம்: இயக்கப்போவது யார்?
Published On:
| By admin

இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel