“அந்த இடத்தில் வேண்டாம்” :ஷூட்டிங்கை மாற்றிய விஜய்

entertainment

இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் நடைபெற்ற விபத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட சோகத்திலிருந்து மீண்டு, விறுவிறுவென இயங்கத் தொடங்கியிருக்கிறது தமிழ் சினிமா. மிகுந்த சூனியம் மிகுந்த சூழலை EVP ஃபிலிம் சிட்டி மட்டுமே பெற்றிருக்கிறது. இந்தியன் 2 ஷூட்டிங் தடைபட்டு நின்றுவிட, அங்கு ஷூட்டிங்கை நடத்திக்கொண்டிருந்த பா.ரஞ்சித்-ஆர்யா இணைந்துள்ள சல்பேட்டா திரைப்பட யூனிட்டும் அந்த இடத்தை காலி செய்து கிளம்பிவிட்டனர். இதனைவிட, இந்தியன் 2 ஷூட்டிங்குக்கு முன்பே திரையுலகினரால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மாஸ்டர் படக்குழுவும் அந்த இடத்தை புறக்கணித்துவிட்டது.

EVP ஃபிலிம் சிட்டியில் இந்தியன் 2 ஷூட்டிங் பல மாதங்களாக நடைபெற்றது. இந்த ஷூட்டிங்கைவிடவும், மாஸ்டர் ஷூட்டிங்கை அங்கு நடத்துவார்களா என்ற எதிர்பார்ப்பு நிலவியதற்குக் காரணம், சென்ற வருடம் அந்த இடத்தில் நடைபெற்ற விபத்து. பிகில் பட ஷூட்டிங்கின்போது ஏற்பட்ட விபத்தில் செல்வராஜ் என்பவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருடைய உயிருக்கு அப்போதைக்கு ஆபத்தில்லை என்று அறிந்தபிறகே விஜய் அங்கு ஷூட்டிங்கில் ஈடுபட்டிருந்தார். பிகில் ஷூட்டிங் முடிந்த சில வாரங்களில் செல்வராஜ் சிகிச்சை பலனின்றி இறந்துபோய்விட அவருக்குத் தேவையான அனைத்து செட்டில்மெண்டையும் செய்யவேண்டுமென தனிப்பட்ட முறையில் விஜய் கேட்டிருந்தார் என்கின்றனர் செல்வராஜின் நண்பர்கள். எனவே, விஜய்யின் அடுத்தப் படமான மாஸ்டரின் ஷூட்டிங் EVPயில் நடைபெறுமா என்று காத்திருந்தனர். ஆனால், அனைவருக்கும் ஏமாற்றமளிக்கும் விதத்தில் EVPக்கு எதிரே உள்ள பாழடைந்த குடோன் ஒன்றில் ஷூட்டிங்கை நடத்தினார் லோகேஷ் கனகராஜ்.

செட் அமைக்காமல், இயல்பான ஸ்பாட்களில் படமெடுப்பதில் ஆர்வம் கொண்டவர் லோகேஷ் என்பதால் இதனை தமிழ் சினிமா பெரிதாகக் கருதவில்லை. ஆனால், அந்த ஷூட்டிங்கின் இடையே இரண்டு நாட்கள் மட்டும் சேசிங் காட்சிகள் சிலவற்றைப் படமாக்கவேண்டிய அவசியம் இருந்தது. இதற்கு முதல் தேர்வாக EVP ஸ்பாட்டையே மாஸ்டர் டீம் தேர்வு செய்து வைத்திருந்தது. ஆனால், இந்தியன் 2 ஷூட்டிங்கில் ஏற்பட்ட விபத்தின் காரணத்தினால் அங்கு ஷூட்டிங்கை நடத்தாமல் சென்னைக்கு வெளிப்புறத்திலுள்ள பகுதிகளில் இரண்டு நாள் ஷூட்டிங்கை முடித்துக்கொண்டு மீண்டும் EVPக்கு எதிரேயுள்ள இடத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறது படக்குழு என்கின்றனர். ஏன் இங்கு ஷூட்டிங் நடத்தப்படவில்லை என்று விசாரித்தபோது “அந்த இடத்தில் வேண்டாம்” என்று விஜய் பர்சனலாகக் கூறியதால் ஷூட்டிங் நடைபெறும் இடத்தை மாற்றிவிட்டோம் என்கின்றனர் படக்குழுவினர்.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *