�சமீபத்தில் வெளியான க/பெ.ரணசிங்கம் திரைப்படத்தின் டீசரைப் பார்த்த கவிஞர் வைரமுத்து தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் க/பெ.ரணசிங்கம் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. விருமாண்டி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி கௌரவ வேடத்தில் நடித்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாகத் திரைப்பட வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் தமிழ் சினிமா அப்டேட்டுகள் அதிக அளவில் வெளிவராமல் இருந்தது. ஊர் அடங்கில் வழங்கப்பட்டிருக்கும் சில தளர்வுகளின் அடிப்படையில் மீண்டும் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் க/பெ.ரணசிங்கம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியானது.
சமூகம் சார்ந்த பிரச்சினைகளை மையக்கருவாகக் கொண்டு உருவாகியிருக்கும் இந்தத் திரைப்படத்தின் டீசரைப் பார்த்த பிரபலங்கள் பலரும் படக்குழுவினரைப் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் படத்தின் டீசரைப் பார்த்த கவிஞர் வைரமுத்து தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
அவர் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், **”நல்ல கலைகளெல்லாம் மனித குலத்தின் வலியிலிருந்து வழிந்தவை. இந்தப் படம் இன்னொரு வலி. இது வெற்றிபெறக் கூடும் என்று என் நம்பிக்கை நரம்பு துடிக்கிறது. பார்ப்போம்”** என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**
�,”