c30 நிமிடம் நடிக்க ஒரு கோடி கேட்ட நடிகை!

Published On:

| By admin

பிரபலமான கதாநாயகனுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டாலோ அல்லது அவர் நாயகியாக நடித்த படம் வெற்றி பெற்றுவிட்டாலோ, சம்பளத்தை சம்பந்தமில்லாமல் அதிகரித்து கேட்பதை நடிகைகள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதற்கு காரணம் நடிகைகள் மட்டுமல்ல தயாரிப்பாளர்கள், இயக்குநர்களின் ஆர்வக்கோளாறும் ஒரு காரணம்.
கதையின் மீது நம்பிக்கை வைக்காமல், அந்த நடிகை நடித்துவிட்டாலே படம் ஓடிவிடும் என்கிற குருட்டு நம்பிக்கை. அப்படித்தான் நடிகை நயன்தாராவின் சம்பளம் அதிகரித்தது. சமீபத்தில் அறிமுகமாகி வளர்ந்த நடிகைகளில் சிலர் சம்பளத்தை கணிசமாக உயர்த்தி விட்டதாக தயாரிப்பாளர்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. ஒரு படத்தில் நடிக்க 3 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே இப்போது ரூ.5 கோடி கேட்கிறாராம். இவர் தற்போது விஜய் ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களிடம் பிரபலமான ராஷ்மிகா மந்தனாவும் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளார்.
சமீபத்தில் வெளியான புஷ்பா படத்துக்கு பிறகு ராஷ்மிகா அகில இந்திய அளவில் பிரபலமாகியுள்ளதால் புஷ்பா படத்துக்கு முன்பு 2 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய ராஷ்மிகா இப்போது ரூ.4 கோடி கேட்கிறாராம். இந்த நிலையில் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் தெலுங்கு படத்தில் முதல் மந்திரியாக வரும் ராம் சரணை பேட்டி எடுக்கும் பத்திரிகையாளராக கௌரவத் தோற்றத்தில் 30 நிமிடம் நடிக்க ராஷ்மிகாவை அணுகியபோது
ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேட்டு அதிர்ச்சி கொடுத்தாராம். ஷங்கர், ராம் சரண் கூட்டணி, அகில இந்திய படம் என்பதுடன் புஷ்பா படம் மூலம் ராஷ்மிகாவுக்குக் கிடைத்திருக்கும் அகில இந்திய அங்கீகாரத்தை வணிகரீதியாக அறுவடை செய்ய தயாரிப்பாளர் முயற்சி செய்வதால்
ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுக்க தயாராகிவிட்டாராம்.
**-அம்பலவாணன்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share