ஹீரோவாகும் ஷங்கர் மகன்?

entertainment

தென்னிந்திய சினிமாவில் தமிழ், தெலுங்கு,மலையாளம்,கன்னடம் என நான்கு மொழிகளிலும் முன்னணி நடிகர்களாக ஆதிக்கம் செலுத்தக்கூடியவர்களில் பெரும்பான்மையானவர்கள் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்களின் வாரிசுகளாகவே இருக்கின்றனர்.

இயக்குநர் சங்கருக்கு ஐஸ்வர்யா, அதிதி என இரண்டு மகள்களும் அர்ஜித் என ஒரு மகனும் உள்ளனர். இவர்களில் மருத்துவரான அதிதி இப்போது நடிகையாகிவிட்டார்.

முத்தையா இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் விருமன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் அதிதி. தன் வாரிசுகளை திரைத்துறையில் விடக்கூடாது என்பது இயக்குநர் ஷங்கரின் எண்ணம் என்பார்கள். ஆனால் வாரிசுகள் அப்படி இல்லை. அவர்களுக்கு இருந்த ஆர்வம் காரணமாக அதிதி நாயகியாகியிருக்கிறார்.

அடுத்து அவருடைய மகன் அர்ஜித்தும் திரைத்துறைக்குள் வரவிருக்கிறாராம். தொடக்கத்தில் இயக்குநர் ஆக வேண்டும் என்கிற எண்ணத்தில் அமெரிக்கா போய் இயக்குநருக்கான படிப்பைப் படித்துவிட்டு வந்திருக்கிறார். அதனால் அவர் இயக்குநராகப் போகிறார் என்று எல்லோரும் கூறிக் கொண்டிருக்க அவர் கதாநாயகன் ஆகவிருக்கிறாராம்.

இதற்காக என் எஸ் டி எனப்படும் நேசனல் ஸ்கூல் ஆஃப் டிராமா நிறுவனத்திலிருந்து முக்கியமான ஒருவர் அர்ஜித்துக்கு நடிப்புப் பயிற்சி கொடுத்துவருகிறாராம்.

அர்ஜித் விரைவில் கதாநாயகனாக அறிமுகமாகும் அறிவிப்பு வரும் என்கிறார்கள் சினிமா வட்டாரத்தில்.

**-இராமானுஜம்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *