மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 நவ 2021

இரு இயக்குநர்களால் முடியாத கதையை எடுக்கும் சசிகுமார்

இரு இயக்குநர்களால் முடியாத கதையை எடுக்கும் சசிகுமார்

இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் பாலா ஆகிய இருவரும் ‘குற்றப் பரம்பரை’ எனும் படத்தைத் தயாரிக்கப் போவதாக அறிவித்தனர். இதனால் 2016 ஆம் ஆண்டு பெரும் சர்ச்சை எழுந்தது.

எழுத்தாளர் வேல ராமமூர்த்தி எழுதிய கதையைப் பாலாவும், குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்து தன் உயிரை துச்சமென மதித்து, நிராயுத பாணியாகப் போராடிய மக்கள் மீது ஆங்கிலேயர் அரசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிர் நீத்த தியாகிகளின் போராட்டம் குறித்து பேராசிரியர் ரத்தினகுமார் சேகரித்து வைத்திருந்த பதிவுகளை இயக்குநர் பாரதிராஜா உணர்வுப்பூர்வமாகவும், உயிரோட்டமாகவும் இயக்க இருப்பதாக அறிவித்தார்கள்.

அதற்காக, தேனியில் தொடக்கவிழா எல்லாம் நடத்தினார்கள். உசிலம்பட்டி அருகிலுள்ள பெருங்காமநல்லூர் என்ற இடத்தில் இப்படத்தின் பூஜை நடைபெற்றது. ஆனால் அதோடு அந்த முயற்சிகள் அப்படியே நின்று போனது.

இப்போது குற்றப்பரம்பரைக்கு உயிர் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறாராம் சசிகுமார்.

வேல ராமமூர்த்தியும் அவருடன் இணைந்து பணியாற்றவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. சசிகுமார் இயக்கத்தில் அவரே நடிப்பது அல்லது இயக்கம் மட்டும் செய்து வேறு நடிகர்களை நடிக்கவைப்பது என்பது குறித்தெல்லாம் ஆலோசனை நடந்து வருகிறதாம். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இப்படத்தைத் தயாரிக்கவிருக்கிறாராம்.

-இராமானுஜம்

சிவசங்கருக்கு உதவிய சிரஞ்சீவி

2 நிமிட வாசிப்பு

சிவசங்கருக்கு உதவிய சிரஞ்சீவி

கமல் இடத்தில் நீலாம்பரி எப்படி?

3 நிமிட வாசிப்பு

கமல் இடத்தில் நீலாம்பரி எப்படி?

ஷங்கரின் அடுத்த பிரம்மாண்டம்!

3 நிமிட வாசிப்பு

ஷங்கரின் அடுத்த பிரம்மாண்டம்!

புதன் 24 நவ 2021