Wஇந்தியில் ரீமேக்காகும் மாஸ்டர்!

Published On:

| By Balaji

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பொங்கல் தின சிறப்பாக ஜனவரி 13-ஆம் தேதி திரையரங்கில் வெளியான திரைப்படம் மாஸ்டர்.

விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜூன் தாஸ், கெளரி கிஷன் என பலர் நடிப்பில் அனிருத் இசையில் வெளியானது மாஸ்டர். கடந்த வருடம் ஏப்ரல் மாதமே வெளியாகியிருக்க வேண்டியது, கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போய் ஒருவருட காத்திருப்புக்குப் பிறகு மாஸ்டர் வெளியானது .

விஜய்க்கு இணையான கதாபாத்திரத்தில் வில்லனாக விஜய்சேதுபதி நடித்திருக்கிறார். கல்லூரிப் பேராசிரியரான விஜய், பணி மாற்றலாக நாகர்கோவிலில் இருக்கும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு மாஸ்டராக செல்கிறார். விஜய்சேதுபதியால் தீயபழக்கங்களுக்கு அடிமையாக இருக்கும் சிறார்களை மீட்டு, விஜய்சேதுபதியை வீழ்த்தும் மாஸ் ஹீரோயிஸ சினிமா தான் மாஸ்டர்.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் என ஒட்டுமொத்த இந்தியாவிலும் ஒரே நேரத்தில் வெளியானது மாஸ்டர். அதோடு, நேரடியாக இந்தியில் விஜய்க்கு வெளியான முதல் திரைப்படமும் இதுவே. இந்தியில் ‘விஜய் தி மாஸ்டர்’ என டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. தற்பொழுது, மாஸ்டர் திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்ய இருக்கிறார்கள்.

எண்டமோல் ஷைன் மற்றும் சினி 1 ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து மாஸ்டர் இணைத் தயாரிப்பாளர் லலித்குமார் இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய இருக்கிறார். இந்தி ரீமேக்கில் நடிக்க இருக்கும் நடிகர், நடிகையர்களின் தேர்வு விரைவில் துவங்க இருக்கிறதாம். இந்திக்கு ஏற்றமாதிரி களத்தை மாற்றி, மாஸ்டர் இந்தியிலும் வெளியாகிறது. இந்த அறிவிப்பினால், விஜய் ரசிகர்கள் செம ஹேப்பியில் இருக்கிறார்கள்.. நிச்சயம், விஜய்க்கு இது பெருமை கொள்ளத்தக்க விஷயம் தான்.

**-ஆதினி**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share