qதீபிகா படத்தை குப்பை என விமர்சித்த கங்கணா

entertainment

கன்னட மொழியில் வெளியான ‘ஐஸ்வர்யா’ என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் தீபிகா படுகோன். இந்தியில் ‘ஓம் ஷாந்தி ஒம்’ படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். அதனை தொடர்ந்து இந்தி சினிமா உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் தீபிகா படுகோன், சிறந்த நடிகைக்கான உலக சாதனையாளர் விருதை வென்ற முதல் இந்திய நடிகை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

நடிகை தீபிகா படுகோன் கடந்த 2018ஆம் ஆண்டு பிரபல இந்திநடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தீபிகா படுகோன் நடித்த கெஹ்ரயான் என்கிற இந்திப்படம் பிப்ரவரி 11ஆம் தேதி ஓடிடியில் ரிலீசாகி உள்ளது.

ஷகுன் பத்ரா இயக்கிய கெஹ்ரையன், நவீன கால உறவுகளின் நாடகம். தீபிகா படுகோன் மற்றும் சித்தாந்த் சதுர்வேதி தவிர, படத்தில் அனன்யா பாண்டே , தைரிய கர்வா, நசிருதீன் ஷா மற்றும் ரஜத் கபூர் ஆகியோர் நடித்துள்ளனர். வயது வந்தோருக்கான இந்தப் படத்தில் அந்தரங்கமான படுக்கையறை மற்றும் முத்தக் காட்சிகளில் தீபிகா படுகோன் நடித்திருப்பது கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.

இந்தி நடிகர் ரன்வீரை காதல் திருமணம் செய்துகொண்ட தீபிகா படுகோன் இப்படிப்பட்ட காட்சியில் நடித்தது பற்றி அவரிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “மற்ற நடிகர்களுடன் நெருக்கமாக நடிப்பது குறித்து ரன்வீர் மிகவும் பெருமையாக நினைக்கிறார் என தான் நினைப்பதாகவும்… தனது நடிப்பைப் பற்றி அவர் மிகவும் பெருமைப்படுகிறார் என்றும் கூறியுள்ளார்..

இந்தப் படத்தில் தீபிகாவுடன் நெருக்கமாக நடித்தது குறித்து கதாநாயகன் சித்தாந்த் சதுர் வேதி கூறுகையில், “இந்த படத்தின் கதையைக் கேட்ட உடனேயே நடிக்க ஒப்புக் கொண்டேன். காரணம் என்னுடன் ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார் என்பதுதான். கதையின் படி படத்தில் முத்தக்காட்சிகள் முழுக்க இடம் பெற்றுள்ளது. இந்த காட்சியில் தீபிகா படுகோனேவுடன் நடிக்க மிகவும் பயந்தேன். இத்தனை நெருக்கமான முத்தக்காட்சிகள் அவசியம்தானா? என டைரக்டர் ஷகுனிடமும் கேட்டேன். பின்னர் கதைக்கு அவசியம் என்பதால் அந்த காட்சிகளில் பதற்றத்துடனே நடித்து முடித்தேன் என கூறியுள்ளார்..

இந்நிலையில் இந்த படத்தை குப்பை என்று வர்ணித்திருக்கிறார் கங்கனா ரணாவத். அவர் கூறுகையில், நானும் இந்த தலைமுறையை சேர்ந்தவள்தான். தயவு செய்து டீன் ஏஜ் நவீன திரைப்படம் என்ற பெயரில் குப்பைகளை விற்க வேண்டாம். தரமற்ற திரைப்படங்கள் எப்போதும் தரமற்றமவை தான். எந்த வகை ஆபாசத்தை காட்டியும் அந்த படத்தை காப்பாற்ற முடியாது. இது அடிப்படை உண்மை. கெஹ்ரையான் படத்தில் எந்தவிதமான ஆழமான கருத்துகளும் இல்லை என தனது சமூக வலைதள பக்கத்தில் விமர்சித்துள்ளார்.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *