தெலுங்கு புத்தாண்டான ஏப்ரல் 12 அன்று நடிகர் விஸ்வக் சென்னின் “காமி” திரைப்படம், தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில், ZEE5 இல் திரையிடப்படுகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, தெலுங்கு பிளாக்பஸ்டர் ‘காமி’ திரைப்படத்தின் டிஜிட்டல் பிரீமியரை அறிவித்துள்ளது.
திரையரங்கு வெற்றியைத் தொடர்ந்து, காமி திரைப்படம் ஏப்ரல் 12 முதல், தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் ZEE5 ல் வெளியாகிறது.
கார்த்திக் குல்ட் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், வி செல்லுலாய்டு வழங்க, அறிமுக இயக்குநர் வித்யாதர் ககிதா எழுதி, இயக்கியுள்ள “காமி” திரைப்படத்தில், விஷ்வக் சென், சாந்தினி சௌத்ரி, அபிநயா, ஹரிகா பெடடா மற்றும் முகமது சமத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் வித்யாதர் ககிதாவின் தெலுங்கு படமான ‘காமி’ உணர்ச்சிகரமான கதையையும், ஒரு அட்டகாசமான சினிமா அனுபவத்தையும் ஒருங்கே தரும் படைப்பாக அமைந்துள்ளது.
இதுகுறித்து இயக்குநர் வித்யாதர் கூறுகையில், “காமி படத்தை உருவாக்குவது பல சவால்கள் நிறைந்த பயணமாக இருந்தது, ஆனால் இப்படத்திற்குப் பார்வையாளர்களிடமிருந்து கிடைத்து வரும் பாராட்டுக்கள் எங்களை பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்குகிறது. இப்படத்திற்காக நாங்கள் ஐந்து வருடங்களுக்கும் மேலாகக் கடின உழைப்பைத் தந்துள்ளோம்.
இப்போது ZEE5 இல் தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் டிஜிட்டல் பிரீமியர் மூலம் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுடன் இப்படத்தைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம். இந்த படம், திரைப்படங்கள் மீதான எங்களின் காதல் மற்றும் எங்களின் அயராத உழைப்பு, இது உலகளாவிய தளத்தில் புதிய உயரங்களை எட்டுவதைக் காண மகிழ்ச்சியாகவுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
காமி கதை என்ன?
மனித ஸ்பரிசத்தை உணர முடியாத ஒரு அரிய நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு அகோரி தான் ஷங்கர். துரோணகிரி மலையில் 36 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் மர்மமான காளானான மாலிபத்ராவைத் தேடி அவர் செல்கிறார். வழியில், ஷங்கர் இதேபோன்று அந்த காளானைத் தேடும் நுண்ணுயிரியலாளர் ஜானவியை (சாந்தினி சௌத்ரி) சந்திக்கிறார். அவர்களின் விதி, இமயமலையின் பனிக்குளிரில் அவர்களை அலைக்கழிக்கிறது. இன்னொரு புறம் இந்தக்கதை இந்தியக் கலாச்சாரத்தின் ஒரு அம்சமாக அறியப்பட்ட தேவதாசி பாரம்பரியத்தின் பாதகங்களைப் பேசுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இராமானுஜம்
மதுரை சித்திரைத் திருவிழா கோலாகல துவக்கம்!
முதல்வருக்கு கிடைத்த தருமபுரி ரிப்போர்ட்…மாவட்டச் செயலாளர்களை வெளுத்துக் கட்டிய அமைச்சர்!