பொன்னியின் செல்வன் நாவலில் வந்தியத்தேவன், நந்தினி கதாபாத்திரங்களுக்கு இணையானது படகோட்டியான பூங்குழலி கதாபாத்திரம்.
செப்டம்பர் 30 அன்று வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஐஸ்வர்யாலட்சுமி விஷால் நடிப்பில் வெளியான ‘ஆக்க்ஷன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.
அதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான ‘ஜகமே தந்திரம்’ படத்தில் இலங்கை தமிழ் பெண்ணாக நடித்தார்.
சாய் பல்லவி நடித்த ‘கார்கி’ படத்தை தயாரித்தவர்களில் இவரும் ஒருவர். கடைசியாக பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்தார்.
தற்போது மீண்டும் குமாரி என்ற படத்தை தயாரித்து வருகிறார். இந்த படம் தமிழிலும் வெளியாக இருக்கிறது.
இதுகுறித்து ஐஸ்வர்யா லட்சுமி, “மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன் முதல் பாகம்’ வெளியானது.
அதில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். இதற்கு எதிர்பாராத இடங்களிலிருந்து கிடைத்து வரும் பாராட்டுகள் என்னை உற்சாகமடைய செய்திருக்கிறது.
தற்போது ‘அம்மு’ என்ற பெயரில் தயாராகி இருக்கும் தெலுங்கு திரைப்படமொன்று ஓடிடி தளத்தில் அக்டோபர் 19ம் தேதி அன்று வெளியாகிறது.
அக்டோபர் 28 ஆம் தேதி அன்று ‘குமாரி’ என்ற மலையாள படமும் வெளியாகிறது
இதிலும் கதையின் நாயகியாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கிறேன்” என்றார்.
இராமானுஜம்
காந்தாரா பான் இந்திய படமாக வெளியிடாதது ஏன்?: ரிஷப் ஷெட்டி
உக்ரைனை அழிப்பது எங்கள் நோக்கமல்ல: புதின்