மதுரை சித்திரைத் திருவிழா கோலாகல துவக்கம்!

Published On:

| By christopher

மதுரை கள்ளழகர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா கொட்டகை முகூர்த்தகால் ஊன்றும் நிகழ்வுடன் இன்று (ஏப்ரல் 8) கோலாகலமாக துவங்கியது. விழாவில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

உலக புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா இந்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், கள்ளழகர் திருக்கோயில் சார்பில் மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயிலில் கொட்டகை முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் விழா இன்று கோலாகமாக தொடங்கியுள்ளது.

விழாவையொட்டி ஆயிரம் பொன் சப்பரத்தில் வைக்கப்படும் யாழி முகத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டு கொட்டகை அமைக்க முகூர்த்தக்கால் ஊன்றும் நிகழ்வு வேதமந்திரங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்கிட நடைபெற்றது. தொடர்ந்து வண்டியூர் தேனூர் மண்டபத்திலும் இதேபோன்று முகூர்த்தகால் நடும் விழா நடைபெற்றது.

மதுரையில் சித்திரை திருவிழா கொட்டகை முகூர்த்தத்துடன் துவங்கியுள்ள நிலையில், மீனாட்சி அம்மன் திருக்கோவில் சித்திரைத் திருவிழா வாஸ்து சாந்தியுடன் வரும் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்குகிறது.

தொடர்ந்து, சித்தரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக வரும் 19ம் தேதி இரவு மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகமும், 20ம் தேதி மீனாட்சி அம்மன் திக்கு விஜயம், 21ஆம் தேதி மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், 22ஆம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெறுகிறது.

இதே போன்று மதுரை தல்லாகுளத்தில் வரும் 22ம் தேதி கள்ளழகரை எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவையும், விழாவின் உச்ச நிகழ்ச்சியாக வரும் 23ஆம் தேதி அதிகாலை கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறுகிறது.

ஏற்கனவே மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஆரம்ப நிகழ்வாக முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றுள்ள நிலையில் இன்று மதுரை கள்ளழகர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா கொட்டகை முகூர்த்தகால் ஊன்றும் நிகழ்வுடன் கோலாகலமாக துவங்கியுள்ள நிலையில் மதுரை மாநகரம் விழா கோலம் பூண்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ராமலிங்கம்

4 கோடி பறிமுதல்… அண்ணாமலை ரியாக்‌ஷன்!

கன்னியாகுமரி: எக்ஸ்பிரஸ் வேகத்தில் விஜய் வசந்த்… கை கொடுக்கும் தாரகை… ஏனோதானோ தளவாய்… என்ன செய்வார் பொன்னார்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share