அன்பே வா சீரியல் நாயகன் விராட்டின் திருமணம் இன்று (ஏப்ரல் 18) காலை, மகாபலிபுரத்தில் நடைபெற்றுள்ளது.
கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான பேரழகி சீரியல் மூலம் தமிழில் அடியெடுத்து வைத்தவர் விராட் (34). அந்த சீரியல் குறுகிய காலத்திலேயே முடிவுக்கு வந்தது.
இதையடுத்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலில் நாயகனாக விராட் நடித்து வருகிறார்.
இந்த சீரியல் அவரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரிச்சயமான முகமாக மாற்றியுள்ளது. இந்த நிலையில் இன்று காலை 9 மணிக்கு, மகாபலிபுரத்தில் விராட்-நவீனா திருமணம் நடைபெற்றுள்ளது.
விராட் போல நவீனாவும் திரையுலகைச் சேர்ந்தவர் தான். பிரபலங்களுக்கு மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஆக பணியாற்றி வருகிறார்.
விராட்-நவீனா திருமணம் இருதரப்பு குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. இதில் சின்னத்திரை பிரபலங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருக்கின்றனர்.
அப்பகுதியில் உள்ள பீச் ரெசார்ட் ஒன்றில் திருமணம் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பாஜக – ஆர்எஸ்எஸ் இந்தியாவின் கருத்தியலுக்கு எதிரானவர்கள்: ராகுல் காட்டம்!
‘கில்லி’க்கு போட்டியாக ரீ ரிலீஸ் ஆகும் ‘மங்காத்தா’… எப்போன்னு பாருங்க!
எடப்பாடி பழனிசாமி மீது தயாநிதி மாறன் அவதூறு வழக்கு!