பாஜக – ஆர்எஸ்எஸ் இந்தியாவின் கருத்தியலுக்கு எதிரானவர்கள்: ராகுல் காட்டம்!

அரசியல்

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இந்தியாவின் கருத்தியலுக்கு எதிரானவர்கள் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று (ஏப்ரல் 18) குற்றம் சாட்டியுள்ளார்.

21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் நாளை முதல்கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தேசிய அளவில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கும் இடையே போட்டி நிலவுகிறது.

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள அனைத்து மாநிலங்களிலும் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதல்கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் உள்ள பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு பிரதமர் மோடி நேற்று கடிதம் எழுதினார்.

இந்தநிலையில், பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக போராட அழைப்பு விடுத்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில், “காங்கிரஸ் தொண்டர்கள் தான் கட்சியின் முதுகெலும்பாகவும் டிஎன்ஏ-வாகவும் இருக்கிறார்கள்.

பாஜக – ஆர்எஸ்எஸ் இந்தியா என்ற கருத்தியலுக்கு எதிரானவர்கள். அவர்கள் நமது அரசியலமைப்பு சட்டம், தேர்தல் ஆணையம் உள்ளிட்ட ஜனநாயக கட்டமைப்பை தகர்க்கிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளுக்கு எதிராக நீங்கள் தெருக்களிலும், கிராமங்களிலும் ஏன் அனைத்து இடங்களிலும் போராடுகிறீர்கள். நீங்கள் நாட்டின் பாதுகாவலர்கள்.

2024 மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் மக்களின் முக்கிய பிரச்சனைகளை கொண்டுவர எங்களுக்கு உதவி செய்துள்ளீர்கள்.

நாங்கள் உங்களை நம்புகிறோம், நேசிக்கிறோம். பாஜகவையும் அவர்களின் சித்தாந்தத்தையும் நாம் தோற்கடிக்க போகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

‘கில்லி’க்கு போட்டியாக ரீ ரிலீஸ் ஆகும் ‘மங்காத்தா’… எப்போன்னு பாருங்க!

எடப்பாடி பழனிசாமி மீது தயாநிதி மாறன் அவதூறு வழக்கு!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *