வெகு நாட்களுக்குப் பின்பு ஒளிபரப்பப்பட்ட வேக்கப் சாங் காட்சியில் வழக்கம் போல் தொடங்கியது எபிசோட். விசித்ரா, மாயா, பூர்ணிமா சேர்ந்து ரவீனாவின் டபுள் சைட் கேம் குறித்து விமர்சித்து பேசிக்கொண்டிருந்தனர். Bigg Boss Season 7 Day 51
மறுபக்கம், ‘இந்த விக்ரம் நாமினேஷன்ல இருந்து நல்லா எஸ்கேப் ஆயிட்டான்ல’ என விஷ்ணுவும் தினேஷும் பேசிக்கொண்டனர். பின்ன, ’டைட்டில் வின்னர்’ என்றால் சும்மாவா..? 51
இதுபோக அவர் தினமும் இரவு வேலைகளில் செய்யும் தியான காட்சிகளைக் கண்ட லைவ் ஆடியன்ஸ் அதை டிரால் செய்து வருகின்றனர். ‘நான் அம்பானி ஆவேன்’ என ஒரு படத்தில் நடு சாமத்தில் எழுந்து தியானம் செய்வது போல், ‘நான் டைட்டில் வின்னர் ஆவேன்’ என தியானித்து வருகிறார் விக்ரம். அவரது தன்னம்பிக்கையில் பாதியாவது நம்மில் பலருக்கு வர வேண்டும்.
அடுத்ததாக பெரிதும் பில்டப் கொடுக்கப்பட்ட முதல் ‘பூகம்ப டாஸ்க்’ அறிவிக்கப்பட்டது. இவர்கள் தந்த அலப்பறைகளுக்கு முந்தைய சீசன்களில் தந்தது போல் மிக கடினமான டாஸ்க்களைத் தரப் போகிறார்கள் என ஆவலுடன் எதிர்பார்த்தால், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களில் பிரபலமாக வலம் வந்த ஒரு பந்து சேர்க்கும் கேமை டாஸ்க்காக தந்தனர்.
நிஜமாகவே பிக்பாஸ் டாஸ்க் டீமின் கற்பனை திறனைக் கண்டு ஒவ்வொரு வாரமும் வியக்க மட்டுமே முடிகிறது. அந்த டாஸ்கில் வீட்டின் பெரும்பான்மையானோர் தோற்றுப்போக, வீட்டிற்குள் வரப் போகும் ஒரு வைல்டு கார்டு எண்ட்ரீ உறுதியானது.
இந்நிலையில், ஒரு பக்கம் வழக்கம் போல் மாயாவும் பூர்ணிமாவும் செய்கைகள் மூலம் புறணி பேசிக்கொண்டனர். மைக்கை கழட்டி விட்டு பேசுவது, மைக் பேட்டரியை ஆஃப் செய்து பேசுவது, நாமினேஷன் டிஸ்கஷன் போன்றவைகள் எதுவும் விதிமீறலுக்குள் வராது போலும். ‘விஷ்ணு ரொம்ப நல்ல பையன். அவனுக்கு உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு. கொஞ்சம் யோசிச்சி சொல்லு’ என செய்கையில் மாயா சொன்னார்.
மேலும், வைல்டு கார்டு எண்ட்ரீயாக விஜய் வர்மா வந்தால் உங்களுக்கு ஜாலி தான என மாயாவிடம் பூர்ணிமா கேட்டார். இத்தனையும் செய்கையில் தான். பிக் பாஸே அதற்கு சப்டைட்டில் போட்டுவிட்டார். அதைத் தொடர்ந்து மீண்டும் ஒருமுறை கமல்ஹாசனை குறை சொல்ல ஆரம்பித்தார் பூர்ணிமா. ‘என்ன வில்லனா காட்றாங்க’, ‘அர்ச்சனா தான் ஹீரோ’, ‘கமல் சார் என்ன அவமானப்படுத்திட்டாரு’ என பூர்ணிமாவின் புலம்பல்கள் முடிவதாகயில்லை.
பிக் பாஸின் அனைத்து சீசனிலும் தொன்றுதொட்டு வரும் சோற்றுப் பிரச்சனை இந்த சீசனிலும் வந்ததை நேற்றைய (நவம்பர் 21) எபிசோடில் காண முடிந்தது. கூல் சுரேஷுக்கு பொறியல் வைக்கவில்லை என்கிற தனது உரிமைக் குரலை கூல் சுரேஷ் எழுப்ப, ‘அது வெஜிடேரியன்ஸ்க்காக கொஞ்சமா பண்ணோம்’ என கிச்சன் டீம் சொல்லியும் அவர் கேட்பதாக இல்லை. பொறியலுக்காக மறியல் செய்யும் அளவிற்கு பேசிய கூல் சுரேஷ், ஒரு கட்டத்துக்கு மேல் அழவே தொடங்கிவிட்டார். வீட்டின் கேப்டனான தினேஷ் அவரை சமாதானப்படுத்தினார். அப்போது, ‘நிக்ஷனுக்கு சிக்கன் கிடைக்கலன்னா இந்நேரம் அவன் என்ன பண்ணிருப்பான். அவன் ஜால்ரா தட்றான்’ என்றார்.
அடுத்ததாக அறிவிக்கப்பட்ட டாஸ்க் படி, ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் தங்கள் வாழ்வில் நிகழ்ந்த ஒரு பூகம்ப நிகழ்வு குறித்து எல்லோரிடமும் கூற வேண்டும். அதில் முதலாக பேசிய தினேஷ், தனது திருமண வாழ்வில் நிகழ்ந்த பிரிவு குறித்து பேசினார். யார் மீதும் பழி சுமத்தாமல் தன்னுடைய தவறை ஒப்புக்கொண்டு அவர் பேசியது, குறிப்பாக பிரிந்த தன் துணையின் உணர்வையும் மதித்து பேசியது என மிக சிறப்பாகவே அந்த டாஸ்க்கை கையாண்டார்.
அவரைத் தொடர்ந்து வந்த விசித்ரா, “ஷீட்டிங் ஸ்பாட்ல இருக்கும் போது ஸ்டண்ட் மாஸ்டர் என் மீது தகாத இடத்தில் கை வைத்தார். பெரிய நடிகர் ஒருவர் படுக்கைக்கு அழைத்தார். அந்த படத்தின் ஷீட்டிங் முடியும் வரை பயங்கர டார்ச்சராக இருந்தது.
இதை எதிர்த்து நான் கேள்வி கேட்டபோது ஸ்டண்ட் மாஸ்டர் என்னை தாக்கினார். நடிகர் சங்கத்தில் புகார் கொடுக்க சென்றபோது இதையெல்லாம் கண்டுகொள்ள மாட்டர்கள் என்று சிலர் சொன்னார்கள். அதனால் போலீசில் புகார் அளிக்க சென்றேன். ஆனால் என்னுடைய புகாரை கண்டுகொள்ளவில்லை. யாரும் எனக்கு குரல் கொடுக்காததால் சினிமாவை விட்டு வெளியே வந்துவிடு இனி நடிக்க வேண்டாம் என்று கணவர் சொன்னார். அதனால் தான் சினிமாவில் நடிக்கவில்லை” என்று கண்ணீருடன் கூறினார்.
தன் சினிமா வாழ்வில் தனக்கு நடந்த பாலியல் சீண்டல் குறித்து பேசிய தருணம் மிக உணர்ச்சிமிக்க தருணமாகவும், அதிர்ச்சிகரமாகவும் இருந்தது. அதை துணிச்சலாக தெரிவித்த விசித்ராவின் செயல் பாராட்டுக்குரியதே. அவரையடுத்து வந்த மாயா சொன்ன அவரது வாழ்க்கையின் பூகம்ப சம்பவத்திற்குள் பல வலிகளை அவருக்கே உரித்தான பாணியில் லேசாக, சற்று நகைப்புடன் அவர் சொன்னது ரசிக்கும் படி அமைந்தது. இப்படியாக நிறைவானது எபிசோட்.
– ஷா Bigg Boss Season 7 Day 51
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிச. 2-ல் துவங்கும் ‘Pro Kabaddi 10’: தமிழ் தலைவாஸ் அட்டவணை இதோ!
சென்னை: தெரு நாய்கள் கடித்ததில் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்!